மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டுள்ள மைவாட்ச் தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன், அந்தக் குற்ற-எதிர்ப்புக் கண்காணிப்பு அமைப்பிலிருந்து விலகுவதற்கு ஆயத்தமாகி வருகிறார்.
“மைவாட்ச் தானாகவே செத்துப்போகும் என நினைக்கிறேன். நாட்டுப்பற்றுள்ள மலேசியன் என்ற முறையில் என் பங்கை நான் செய்தேன். அதற்காக அடிஉதை பட்டேன். சுடப்பட்டேன்”, என சஞ்சீவன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாக த ஸ்டார் கூறுகிறது.
மைவாட்சுக்காக இன்னொரு தடவை சுடப்படுவதையோ, குடும்பத்தின் பாதுகாப்பைப் பலியிடவோ அவர் தயாராக இல்லை.
“இப்போது எல்லாம் நினைவுக்கு வருகிறது”, என்று தாம் சுடப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்த சஞ்சீவன், தம்மைச் சுட்டவன் “ஒரு இந்தியன், தடிப்பாய், வளர்த்தியாய் இருந்தான்”, என அடையாளம் கூறினார்.
தோழர் சஞ்சீவனின் இந்த முடிவால் வெட்கப்பட்டு, தற்கொலை செய்துகொள்ளவேண்டியது வேறு யாருமல்ல, கீழ்த்தரமான மலேசிய ஜனநாயக ஆட்சிதான். பொதுச்சேவையில் ஈடுப்பட்டுள்ள நாட்டுப்பற்றுள்ள ஓர் உண்மையான குடிமகனின் உயிருக்கு பாதுகாப்பில்லை. சீ…..சீ…….இது நாடா அல்லது சுடுகாடா ……?
கடைசியில் காவல்துறைக்கு என்ன தேவையோ அது கிடைத்து விட்டது!
எல்லாம் சமரச மாயம்! அப்புறம் என்ன, எவன் ஊழலை வெளியே கொண்டு வருகின்றனோ, அவனை போட்டுத் தள்ளு! நாமே ராஜா, நாமே மந்திரி என்று வாழுவோம்! கதை அப்படியல்ல, அப்பா ஒரு அறிக்கை, மகன் ஒரு அறிக்கை என்று விடும்போதே, பின்னால் இருந்து யாரோ அவர்களை ஆட்டி வைக்கின்றனர் என்று புரிந்துக் கொண்டோம். பாவம் பிள்ளையை பெற்ற பாசம் தந்தையை வாட்டுகின்றது.
காவல் துறை எதை எதிர்பார்த்தார்களோ அதை நடத்தி விட்டனர் . வாழ்க PDRM
வணக்கம். தோழர் சஞ்சீவன் இதை அனைத்தும் அறிந்தே பொது வாழ்க்கைக்கு வந்திருப்பார். ஆகையால் அவர் மனம் உடைந்து போகுவார் என்று நான் எதிர் பார்க்கவில்லை.
நீதி சொன்ன ஏசுவிற்கு சிலுவை. உண்மை சொன்ன Muhammad நபிக்கு கொலை மிரட்டல், தத்துவம் சொன்ன புத்தருக்கு பாறாங்கல், சமத்துவம் சொன்ன காந்திக்கு துப்பாக்கி சூடு, நாட்டுக்கு நல்லது செய்ய நினைத்த சஞ்சிவனுக்கு?
அப்பா ஒரு அறிக்கை, மகன் ஒரு அறிக்கை என்று விடும்போதே, பின்னால் இருந்து யாரோ அவர்களை ஆட்டி வைக்கின்றனர் என்று புரிந்துக் கொண்டோம். பாவம் பிள்ளையை பெற்ற பாசம் தந்தையை வாட்டுகின்றது.
இன்னொரு (காலமான) துப்பறிவாளர் பால கதைதான் இதுவும்…..முன்னொரு கதை..இப்போது ஒரு கதை! அதற்காக அவர் பின் வாங்குவது கோழைத்தனத்தை காடுகிறது என்று அர்த்தமாகிவிடாது ! புத்திசாலித்தனமாகவும் இருக்கலாம் அல்லது குடும்பா பாதுக்காப்பை எண்ணி எடுத்த முடிவாககூட இருக்கலாம்,…அல்லது நம்பிக்கை நட்சத்திரம் நஜிப்பின் நேரடி அன்பு கட்டளையாகக்கூட இருக்கலாம்…நம்ப பாலாவின் கதை மாதிரி …..எல்லாமே சம்திங் இல்லாம புகையாது சகோதரா…பெரிய இடத்து சமாச்சாரம்…அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும்….அதையெலாம் ஒரு சினிமா மாதிரி எடுத்துக்கணும்.! ஓட்டை போட்டுபுட்டு இப்போ குத்துதே குடையுதுன்னா எப்படி சகோதரா? அவன் இந்தமாதிரி பேசுறான் , அந்த மாதிரி மாத்தி பேசுறான்னு சொல்லபுடாது சகோதரா.அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ! காதுல விழுந்த செய்தி….நம்பா இந்தியன் தாத்தா முன்னாள் சிலங்க்கூர் போலிஸ் துணை தலைவர்..இப்போ பினாங்குக்கு மாத்தப்பாட்டதே இந்த விஷயம்தானாம் ! நம்பா ஆளுக்கு யாருன்னு தெரியும் போலிருக்கு…போய் கேட்கிறப்போ …பொத்திகிட்டு, ஒழுங்கா போத்திகிட்டு ‘பினாங்குக்கு போ’ ன்னு டிக்கெட்டை கையிலேயே கொடுத்தனிப்புப் புட்டானுங்கலாம் ! நான் சொன்னமாதிரி இது பெரிய இடத்து சமாச்சாரம் சகோதரா…இதெல்லாம் சகஜம் ! அடுத்த கதை ஒன்னும் வரும்…அதுவும் இப்படித்தான்….நம்பா சித்தி மெகா சீரியல் கூட பிச்சை எடுக்கணும் சகோதரா !!! நல்ல ஜோக்கு போங்க !!
தேனீ அவர்களே, சஞ்சீவன் மட்டும்தான் போராட வேண்டும் என்பதல்ல, நீங்கள் கூட வெளியே வந்து போராடலாமே? அவர் உயிரை பணயம் வைத்து போராடுவார். நீங்கள் வீட்டில் சொகுசாய் இருந்து கொண்டு குறை மட்டும் சொல்லுவீர். நீங்கள் தியாகி அவர் ஆட்டு வித்தபடி ஆடுபவர். நல்ல இருக்குய்யா உங்க நியாயம்.
மேலிடத்து அழுத்தமா? அல்லது பெட்டிக் கிடைத்துவிட்டதே..போதும் என்ற எண்ணமா? இன்னொரு பாலா உருவாகிறார்.
சரியா போட்டிங்கோ இண்டியன்!!!!!
சஞ்சிவன் வாழும் சொகுசு வாழ்கை எப்படி வந்தது…. அதைப் பற்றி கொஞ்சும் சிந்திப்போமா ?
உண்மைக்கு அழிவில்லை நல்லதம்பி.. இவ்வளவு போராட்டத்திற்கு பிறகும் பெட்டி வாங்கி விட்டார் என்பது அபத்தம். கண்னை மூடிக்கொண்டு பழி சொல்லாதீர்கள். போலீஸ் துறையை கைநீட்டி குற்றம் சட்டும் தைரியம் உங்களுக்கு உண்டா? சஞ்சீவன் செய்தார். தமிழன் பிச்சைகாரனாகத்தான் வாழவேண்டும் என்பது என்ன விதியா? பங்களாதேசி டொயோடா கார் ஒட்டுரான், நம்ம ஆள் சொகுசு கார் ஒட்டக் கூடாதா? ஏன்.. தமிழன் பணம் வைத்திருந்தால் அவன் திருடியோ அல்லது லஞ்ஜம் வாங்கியோதான் வந்திருப்பான் என்று சொல்லும் தமிழன் பற்றுள்ள தமிழன் தானா?
இது இந்தியர்களின் சாபக்கேடு. மற்றவர்கள் நமக்காக போராட வேண்டம் என்று ஒவ்வொரு இந்தியனும் நினைப்பான் ஆனால் அவனே களமிறங்கி போராட மாட்டான், ஆனால் போராட வந்தவனை தனக்கு பிடித்த விததில் போராடா விட்டால் என்னன்னா முடியுமோ அந்த அளவுக்கு கேவல படுத்துவான்.
தம்பி நல்ல முடிவு நல்லா இருங்க ! எங்க நிலைமை எப்படியாவது போகட்டும் !
சார், வணக்கம் . உங்கள் உயிர் உங்கள் குடும்பத்திற்கு அவசியம். . தமிழன் உங்களை சுட்டான் என்றால் நமக்கு அவமானம். இந்த தொழிலை விட்டு நிம்மதியாக வாழுங்கள். இறைவன் உங்களுக்கு கொடுத்த மறு பிறவி. வாழ்த்துகள் சார்.