‘சுத்தமற்ற’ பெர்சே நடத்தும் நடுவர் மன்றத்துக்கு தெங்கு அட்னான் போக மாட்டார்

1 ku nanபிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், பெர்சே ஏற்பாடு செய்துள்ள நடுவர் மன்றத்துக்குச்  செல்லப்போவதில்லை என அறிவித்துள்ளார். தேர்தல் சீரமைப்பைக் கோரும் அந்த என்ஜிஓ-வின் நடவடிக்கை ‘bersih’-ஆக (சுத்தமாக) இல்லை என்றாரவர்.

பெர்சே, புத்ரா ஜெயா நாடாளுமன்றத் தொகுதியில்   வெளிநாட்டவரை வாக்களிக்க அனுப்பி வைத்தது தமக்குத் தெரியும் என்றவர் கூறிக்கொண்டார்.

“வங்காளதேசிகளை வாக்காளர்கள்போல் நடிக்கச் சொல்லி ஒரு டெக்சியில் அழைத்து வந்தார்கள்.

“யார் ஏற்பாடு செய்தது? பெர்சேதான்”, என்று காலையில் செய்தியாளர் கூட்டமொன்றில் தெங்கு அட்னான் கூறினார்.