பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று காலையில் சொன்னதைப் பார்க்கும்ப்போது புத்ராஜெயாவுக்கு வங்காள தேசி வாக்காளர்கள் வந்ததை ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறது என்று பெர்சே 2.0 இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கூறினார்.
மே 5 தேர்தலின்போது பெர்சேதான் வங்காள தேசிகளை புத்ரா ஜெயாவுக்கு அழைத்து வந்தது என அட்னான் கூறியிருந்தார்.
“அப்படியானால், வங்காள தேசிகள் புத்ரா ஜெயாவில் இருந்ததை அவர் ஒப்புக்கொள்கிறாரா?”, என்று அம்பிகா வினவினார்.
அது ஒரு கடுமையான குற்றச்சாட்டு என்று குறிப்பிட்ட அவர், அது உண்மையானால் அட்னான் அதே குற்றச்சாட்டை பெர்சே ஏற்பாடு செய்துள்ள 13வது பொதுத் தேர்தல் மீதான மக்கள் நடுவர் மன்றத்தில் மீண்டும் கூற வேண்டும் என்றார்.
அது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு என்றாரவர்.
மேடம் அம்பிகா ஸ்ரீநிவாசன் அவர்களே உங்களுக்கு என் சபோட் எப்பவும் உண்டு.
இதுதான் வாயை கொடுத்து டிக்கியை பூன்னாக்கி கொள்வதோ? ம்ம்ம்!
சரியான போட்டி! பாடம் கற்பிக்க வேண்டும் இந்த முட்டாள் கூட்டங்களுக்கு……
அதெல்லாம் ஒன்னும் வாசிக்க முடியாது.சட்டம் ஒரு இருட்டறை.அது வேலை செய்யுதா? இல்லையா ?என்று நம்மால் பார்க்கவே முடியறது இல்லை.
இந்த அரசு அவ்வளவு ஸ்ட்ரோங்கா சட்டத்த கை ஆளுகிறார்கள்.அவர்களுக்கு சாதகமாக!!!.அதனால்தான் வெளி நாடுகளில் மக்கள் புரச்சி செய்ய காரணமாகிறது.அது வராமல் தடுப்பது இவர்கள் கையில்தான் உள்ளது.
வாழ்க ஜனநாயகம் !!!!!!!! சபாஸ், அக்கா அம்பிகா….. உங்கள் பணி தொடரட்டும்.
அட்னான் வரமாட்டார்.. அவரின் அல்லக் கைகள் வந்து பின்புறத்தை மட்டும் காட்டிவிட்டு போவார்கள். அதுதான் அவர்களின் பண்பாடு.
இனி கோவில்கள் உடைபடகூடது என்ற ஹின்ட்ரப் திட்டத்தில் கை எழுத்து போட்ட அதே அட்னன் தான் ஜலன் ராமலி கோவில் உடைப்புக்கு காரணமாக இருந்தவர். இதில் இருந்து நம்மை ஏமாற்றி ஓட்டு வாங்கியது யார் என தெரிந்திருக்கும். இதில் நம்ம MIC அல்லகைகள் அவருக்கு பூமாலை போட தயாராக இருக்கிறார்கள்.
அட்னன்னுக்கு பூமாலை சூட ஒரு கோஷ்டி கங்கணம் கட்டி கொண்டுள்ளது.அதை வேடிக்கை பார்த்து ரசிக்க ஒரு கச்சியே காத்து இருக்கு……..
பிடிப்பட்ட கள்ள வாக்காளர்களுக்கு பதில் சொல்லாத அட்னான் ,பார்த்த ஆட்களுக்கு மட்டும் கேள்விக்கேட்கிறாராம்,பொய்களை மூடுவதற்கு அடுக்கடுக்காய் பொய் சொல்லவேண்டிருக்கும்.500 வெள்ளிக்கு விலைபோகும் காட்டுவாசிகள் ஒரு நாள் கண்திறப்பார்கள், அன்று அம்பிகாவின் தரம் இன்னும் பலமடங்கு உயரும்.
அட்னாண்கு சூடு சொரனை இல்லை.