பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரின் தலைமையின் கீழ் இயங்கும் பெர்மாதா நெகாரா செயல்திட்டத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று பிகேஆரின் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன் கூறினார்.
பெர்மாத்தா பிரிவின் செயலாளர் சைடாத்து அக்மா ஹசான் அளித்த தகவல்படி வழங்கப்பட்ட ரிம 150 மில்லியனில்:
1. ரிம20 மில்லியன் அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. 2. ரிம77 மில்லியன் இன்னொரு அரசாங்க செயல்திட்டமான கெமாஸ்சிற்கு கொடுக்கப்பட்டது. 3. மிஞ்சியது திரங்கானு மற்றும் சரவாக்கில் நடத்தப்படும் பெர்மாதாவின் சொந்த செயல்திட்டங்களுக்கு கொடுக்கப்பட்டது.
அரசாங்கம் நேரடியாக சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமே தவிர இடைத்தகரர் மூலமாக அல்ல என்றாரவர்.
இச்செயல்திட்டம் குழந்தைகள் பராமரிப்பு பற்றியது என்பதால் அது கல்வி அமைச்சின் கீழ் வர வேண்டுமேயன்றி பிரதமர்துறையின் கீழ் அல்ல என்று மணிவண்ணன் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
பெர்மாதா நெகாரா 2011 இல் ரிம100 மில்லியனும், 2012 இல் ரிம111 மில்லியனும் அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ளது.
தமிழ் சிறார்களுக்கு?
பெர்மாத்தா செயல்திட்டத்திற்கு வாரி வாரி கொடுப்பார்கள். அது பிரதமரின் துணைவியார் சம்பந்தப்பட்டது. தாய்மொழிப்பள்ளிகளே தாளம் போட்டுக் கொண்டிருக்கின்றன.
பாலர்பள்ளிகள் தோ”ற்றுவிக்கப்படும், படும், படும் என்ற பல்லவியைப் பாடிக் கொண்டிருப்பது தினமும் காதில் விழுகிறது. இந்திய சமூகத்தினரின் குழந்தைகள் மேம்பாடு அடைந்தாலென்ன, குட்டிச்சுவராகப் போனாலென்ன?
அவர்கள் 67 விழுக்காட்டினர். அவர்களுக்குப் பிறகுதான் மற்றவர்கள். இந்தத் தோரணையில் நஜிப் பேசி இருப்பது ஞாபகம் இல்லையோ>
ம இ கா இதையாவது தமிழ்ப்பள்ளிகளுக்காக செய்யுமா? கனவிலாவது நடக்கட்டுமே !!!
கெளங்குதாண்டா எல்லாத்துக்கும்…
ம இ கா கண்டிப்பாக செய்யும் அவர்கள் கர்ணன் பரம்பரைய
சேர்ந்தவர்கள் .
சிறார்களுக்கு பாலர் பள்ளித்திட்டம் வரவேர்க்கவேண்டிய ஒரு நல்ல திட்டம்தான். அது யார் மூலமாக வருகிறது என்பதை ஆராய வேண்டாம், ஆனால் கிடைக்கும் மானியம் எங்குபோய் சேருகிறது ? இங்கேதான் சிக்கல் ! ரோசமா நம் நாட்டு முதல் பெண்மணி , அவர் உள்ளத்தில் இனபேதங்க்களே இருக்கக்கூடாது . எல்லாம் சமம் -எதிலும் சமமென்று திருப்பி அனுப்பிய மானியத்தை ஏன் மற்ற தாய்மொழி பள்ளிகளுக்கு வழங்கவில்லை? என்பதுதான் நமது ஆதங்கம். அள்ளி கொடுக்கவேண்டாம் – கிள்ளியாவது கொடுத்திருக்கலாமே என்பதுதான் நம் கேள்வி . வெறும் பேருக்கு 1Malaysia என்று வாய்கிழிய எச்சில் ஒழுக பேசினால்மட்டும் போதாது , அதை பிரதமர் செயலில் காட்டவேண்டும் !!