வயதாகிக் கொண்டிருக்கும் கட்சியின் தலைவர்கள் மத்திய அரசாங்கத்தில் இடம் பெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என தாம் நம்புவதாக டிஎபியின் தலைவர் கர்பால் சிங் கூறினார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெறும் கட்சியின் சிறப்பு மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய கர்பால், பக்கத்தான் ரக்யாட் அடுத்தப் பொதுத் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்றார்.
“இளைஞர்கள் எங்களிடமிருந்து பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது இயற்கையான நடைமுறை. இன்று நான் காண்பதிலிருந்து, இளைஞர்களாகிய நீங்கள்தான் இந்நாட்டின் அடுத்த அரசாங்கதைப் பெறப்போகிறீர்கள்”, என்று பலத்த கைத்தட்டல்களுக்கிடையில் கர்ப்பால் கூறினார்.
பினாங்கின் முன்மாதிரியை நாட்டின் இதர பகுதிகள் பின்பற்ற வேண்டும் என்று கூறிய அவர், அதிகாரத்தைப் பெறுவதற்கு தயாராகுமறு உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.
கானல் நீர்!
வாழ்த்துக்கள் ! ஆனால் கட்சிக்குள்ளேயே துரோகிகள் இருக்குரார்களே ,கருப்பு ஆடுகளை முதலில் களை எடுங்கள் , சபாவின் துரோகியை என்ன செய்யபோகிறீர்கள் ?
அது சரி— கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை கோட்டை விட்டு விட்டு இனி ஒன்றும் செய்ய முடியாது இவன்கள் எப்படியாவது பதவியில் உட்கார்ந்து கொண்டே இருப்பான்கள்.நீதித்துறை காவல் குண்டர்கள் ராணுவம் எல்லாம் அவன்கள் கையில் –ஒன்றும் நடக்காது.
முயற்சிய தொடருங்கள் வெற்றி நிச்சயம் .
சோதனைக்கு பிறகுதான் சாதனை…
கர்பால் கனவு காண்கிறார். கணபதிராவ் ஆட்சியின் லட்சனம் அடுத்த தேர்தலில் சிலாங்கூர் பாரிசான் கையில விழுந்திடும் நிலையிலிருக்கு, இவருக்கு புத்ராஜொயாவை பற்றி கனவு வேற. ராமசாமியை தூக்கிட்டு அங்க ஒரு வங்காளியை கொண்டுவந்து விடு, வெளங்கிடும் நாடு.