நஜிப்: திருத்தப்பட்ட பிசிஏ ஒரு புதிய ஐஎஸ்ஏ அல்ல

1 conferகுற்றத்தடுப்புச் சட்டம் (பிசிஏ) 1959-இல் செய்யப்படும் திருத்தம்,  விசாரணையின்றித் தடுத்துவைக்க வகை செய்கிறது என்றாலும் அது பழைய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்ஏ) போன்றது அல்ல என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.

திருத்தப்பட்ட பிசிஏ,  திட்டமிட்ட குற்றச் செயல்களை எதிர்க்கும் நோக்கம் கொண்டது  என்று நஜிப்,  நியூ யோர்கில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறியதாக  பெர்னாமா அறிவித்துள்ளது.

இரத்துச் செய்யப்பட்ட ஐஎஸ்ஏ போல்,  இது  இன்ஸ்பெக்டர்  ஜெனரல் அப் போலீசுக்கும் உள்துறை அமைச்சருக்கும் பரவலான அதிகாரத்தை வழங்கவில்லை.

“இனி, (தடுப்புக்காவலில் வைக்கும்)  முடிவை ஒரு நீதிபதிதான் செய்வார். எனவே, போலீசார் யாரையாவது கைது செய்தால் கைதானவரைத் தடுத்து வைப்பது அவசியம் என்பதை நீதிபதிக்கு நிரூபிக்க வேண்டும்”, என்று நஜிப் விவரித்தார்.