கம்போங் ஹக்கா மந்தினில் வீடுகளை உடைக்க முற்பட்ட மேம்பாட்டாளரைத் தடுக்க முயன்ற ஐந்து குடியிருப்பாளர்களும் ஏழு சமூக ஆர்வலர்களும் இன்று கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ்.அருள்செல்வனும் ஒருவர்.
100-ஆண்டு பழைமை வாய்ந்த அந்தக் கிராமத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடப்பது இது இரண்டாவது தடவையாகும். இதற்குமுன் செப்டம்பர் 12-இல், வீடமைப்பாளரின் ஆள்கள் வீடுகளை உடைக்க வந்தபோது, அதைத் தடுக்க முனைந்த கிராமத் தலைவரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஏதோ கொலை குற்றவாளியை கைது செய்வதுபோல் மிகவும் முரட்டுத்தனமாக செயல்படும் காவல் துறையினரை பாருங்கள் ! ஏன் இந்த அராஜக முறை ?? வரம்பை மீறுவதும் ,கெடுபிடி செய்வதும் ஒருதலை பட்சமாக இருக்கக்கூடாது. அம்நோகாரன் இதுபோன்ற எதிர்ப்பு போராட்டம் நடத்தும்போது காவல்துறையினர் புட்டி பாட்டலை சூபிகொண்டு இருப்பது ஏன் ?????
சீனன் பின்னாலே கை கட்டி நிக்கிறான் ,தமிழன் ,போலீஸ்லே மாட்டிகிட்டான் ,,,கி கி கி கி
அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் யாரு? உனக்கு ஓட்டுப் போட்டதற்கு நீ கொடுத்த பரிசாடா என்று அவன் வீட்டு முன்னுக்கு ஆர்ப்பாட்டம் செய்து இருக்கணும் அந்த பகுதி மக்கள். ?