2012 ஆம் ஆண்டு அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை, அரச மலேசிய போலீஸ் படைக்குச் சொந்தமான ஆயுதங்கள், கைவிலங்குகள், வாகனங்கள் என மொத்தம் 309 பொருள்கள் காணமல் போனதாக தகவல் வெளியிட்டிருக்கிறது.
2010-க்கும் 2012-க்குமிடையில் காணாமல் போனதாக பதிவுசெய்யப்பட்டிருக்கும் அப்பொருள்களின் மதிப்பு ரிம 1.33 மில்லியன்.
காணாமல் போன பொருள்களில் கைவிலங்குகள் 156, ஆயுதங்கள் 44, வாகனங்கள் 29.
எந்த வகை ஆயுதங்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.
போலீஸ் தலைமையகமான புக்கிட் அமானிலும் மூன்று மாநில போலீஸ் தலைமையங்களிலும் நிர்வாகம் திருப்திகரமாக இல்லை என்றும் தலைமைக் கணக்காய்வாளர் குறிப்பிட்டிருந்தார்.
1 மலேசியாவிலே இதெல்லாம் சகஜமப்பா!
குண்டர் கும்பலுக்கு ஆயுதங்களை விநியோகித்தது யார்……………!!!!!!!!!!!!
புக்கிட் அமானில் நடக்கின்ற குளறுபடியாலேயே – கீழ்மட்ட நிலையில் உள்ளவர்கள் அதிகம் பாதிக்க படுகிறார்கள். இது முப்பது-நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே கவனிப்பார் இன்றி எல்லாம் நாசமாய் போய்விட்டது. பலமுறை போராடி போராடி நொந்துபோனதுதான் மிச்சம். ஒருசில உதாரணங்கள் : 1972 ம் ஆண்டுமுதல் எங்களுக்கு சேரவேண்டிய EPF , Elaun Willayah , One off RM1,000 ,RM3,000 இதுநாள் வரை கிடைத்தபாடில்லை! மேல் அதிகாரிகள் எங்களின் கோரிக்கைகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. மற்றும் ஒன்றை பாருங்கள். ஒவ்வொரு ஆண்டும் கணினியில் பதிவு செய்யப்பட்டது, என் பெற்றோர் பிறந்தது தமிழ் நாடு, இந்தியா – என் மனைவியின் பெற்றோர் பிறந்தது சரவாக் மாநிலம்( Bidayuh ), ஆனால் தலைமையக மர மண்டைகள் எல்லோரும் இந்தியாவில் பிறந்தவர்கள் என்று இதுநாள்வரை கணினியில் பதிவு செய்யபட்டு உள்ளது ? நாங்கள் எப்படி உருப்படுறது, முன்னேறுவது ? வாச்சான் போச்சான் வேலைதான் அங்கு நடந்துகொண்டு இருக்கிறது . வாய் திறந்தாள் ” டிரான்ஸ்பர் “…
tangal aayuthangalaye paathukaathu kolla teriyatha nam super police, eppadi naattai paathukakka pogiraargal.. ithai kettal sattam tan kadamayei seyyum.. athavathu, kekkuravangala pudichi ulla potturuvanga…
1 மாநிலத்தில் 1 ஆர்மி கேம் சூரயாடப்பட்டுவிட்டது, தீவிரவாதிகள் காட்டுக்குள் பதுங்கி விட்டனர். வேவு பார்க்க 4-5பெர் காட்டுக்குள் அனுப்ப பட்டனர் அதில் நம்ம ஆள் ஒருவர். தீவிரவாதிகள் கையில் மாட்டி கொண்டனர். நம்ம ஆளை அனு-அனுவா சித்ரவதை செய்து அதாவது உயிரோடு மண்டை தோல் உறித்து உயிரோடு சிருக- சிருக அறுத்து கொடூரமா கொன்றனர். சரண் அடைந்து விட்டனர், தண்டனை கிடைத்தது. எங்கே அவர்கள் இப்போ, சுதந்திரமாக திரிகின்றனர் அந்த அதிகாரி குடும்பம் வெளி நாட்டில் பயந்து வாழ்கின்றனர்.
umno காரன் ஆட்சியில் ஜெட் எஞ்சின் ,சுடும் ஆயுதங்கள் ,எல்லாம்
காணாமல் போவது சகஜம் .அடுத்த தேர்தலில் இவன்கள் ஆட்சி
நீடித்தால் மலேசியாவில் உள்ள மாநிலங்கள் காணாமல் போய்விடும் .