சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினரான பாஸ் கட்சியின் ஹனிபா மைடின், தேசிய சேவை (என்எஸ்) இயக்குனர் அப்துல் ஹாடி ஆவாங்கின் வேலை ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹனிபா, தேசிய சேவை பயிற்சியாளர்கள் பலர் பயிற்சிக்காலத்தில் இறந்து போயிருப்பதைச் சுட்டிக்காட்டி அவரது பணி ஒப்பந்தம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, என்எஸ் முகாம்களில் நிகழ்ந்துள்ள மரணங்கள் குறித்து விவாதிக்க அவர் ஒரு தீர்மானம் கொண்டு வந்தபோது மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அதை அனுமதிக்கவில்லை.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட ஒரு பதிலில் 2012 ஜூன் முடிய அம்முகாம்களில் இறந்தவர் எண்ணிக்கை 19 எனக் குறிப்பிடப்பட்டது.
இந்த திட்டம் தேவையே இல்லை,போர் வந்தா நம்மள தான் முன்னே நிப்பாட்டுவாங்க்கோ,பயம் சொல்லலே இனம் அழியும் 10% தான் இருக்கு அப்றோம் 3-5% தான் இருப்போம்.பயிற்சிக்கு போங்கோ ஆனா சுடும் ஆயுதம் பயிற்சி வேணாம்.எல்லா ஹிந்துகும் சொல்லுங்கோ,நன்றி.
இந்த ப…. உண்மைய கேட்டால் அனுமதிக்காது .இவரும் umno
கூலி தானே .
இதனால் மாணவர்களுக்கு என்ன பயன்? அரசாங்க வேலை வாய்ப்பு, அரசாங்க பல்கலை கழகத்தில் படிக்க வாய்ப்பு, ஏதாவது உண்டா? இதுவரை எனக்கு புரியவில்லை. இது தேவையா?