நடப்பு அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடினின் தாராளக் கொள்கைகள் இளைஞர் பகுதியின் மூல நோக்கத்துக்கே குழிபறிப்பதுபோல் இருப்பதால்தான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதாக அக்ராம்ஷா முவாம்மார் உபைடா கூறியுள்ளார்.
ஒத்துப்போவதும் விட்டுக்கொடுப்பதுமான கைரியின் அணுகுமுறை கட்சியின் மூல நோக்கத்துக்கு எதிரானது என்று அக்ராம்ஷா குறிப்பிட்டார்.
“அம்னோ இளைஞர் பகுதி அழுத்தம் கொடுக்கும் ஒரு தரப்பாக விளங்க வேண்டும். மலாய்க்காரர் நலனுக்கும் இஸ்லாத்துக்கும் போராடுவதில் உறுதியுடன் இருக்க வேண்டும்”, என்றவர் கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.
அவருக்கு முதலில் இளைஞர் பகுதியின் செயல்குழுவுக்குப் போட்டியிடும் எண்ணம்தான் இருந்தது. ஆனால், கைரியை எதிர்க்க எவரும் முன்வராததால் தாமே போட்டியிடுவதென முடிவு செய்தார்.
கைரீ மிக அறிவாளி சார் நமது நாட்டில் அடுத்த பிரதமர் ஆகும் தலைவர்களில் கைரீயும் நம்ப ஹீரோயின் நுருல் இசாவும் எதிரும் புதிருமா இருந்தாலும் அறிவாளிகள் இருவரும் மீதும் இணைந்தால் பிர/பன் வழி எல்லாம் செட்டல் சார். ம இ கா இப்ப மெல்ல தேருது
பார்ப்போம்.
கைரி அறிவாளி தான்.. அனால் நூருல் இஸா வோடு ஒப்பிடுவது சரியில்லை.. கைரி குறுக்குவழி பிரபலம்.. நூருல் போராளி.. நூருல் அவர்களின் நிழலுக்குக் கூட கைரி இணை இல்லை..
அக்ராம்ஷாவின் நோக்கம் , ஹிஷாமுடின் மேடையில் கிரிஸ்சை காட்டி மிரட்டினாரே! அதுபோல முஸ்லிம் அல்லாதவர்களை மிரட்டவேண்டும் , மலாய்காரர்களுக்கு எப்பொழுதும் குரல் கொடுக்கவேண்டும் , மற்றவர்களுக்கு இடம்கொடுக்க கூடாது , சலுகைகளும் காட்டக்கூடாது என்கிறார் . ஏன், இன்னும் சொன்னால் ஒரு குட்டி ஹிட்லராக இருக்கசொல்கிறார். நாடு உருப்படுமா ??