பினாங்கில் கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்கு டிஎபி முயற்சித்தது என்று கூறுவோரை எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் வன்மையாகக் கண்டித்தார். தாம் அது போன்ற முயற்சி எதனையும் கண்டதில்லை என்றாரவர்.
செபராங் ஜெயா சந்தைக்கு வருகையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், அக்கட்சி மற்றும் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் ஆகியோருக்கு எதிராக கூறப்படும் அது போன்ற குற்றச்சாட்டுகளில் உண்மை ஏதும் இல்லை என்றார்.
“எங்களுடைய அனைத்து கூட்டங்களிலிருந்தும், நான் பெற்ற அல்லது பார்த்த அனைத்து டிஎபி ஆவணங்களிலிருந்தும் கட்சி அது போன்ற பிரச்னைகளை எழுப்பியதே இல்லை”, என்று அன்வார் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.
“உண்மையில், அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தால், பாஸ்சும் பிகேஆரும் அதனை அனுமதித்திருக்காது”, என்று அவர் மேலும் கூறினார்.
டேய் ! என்னடா சொல்கிறீர்கள் ! ஆளும் கட்சியும் சரி…… எதிர்க் கட்சியும் சரி ! நாட்டுக்கும் மக்களுக்கும் உருப்படியில்லாத சங்கதிகளை அசைப்போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ! கல்வி , பொருளாதாரம் வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் இடம்பெறச் செய்வதற்கு ஆவன செய்யுங்கடா. ஏன்டா மனித நேயத்தை மறந்து இனம் , மதம் நிறம் என்று நீற்றுப் போய் கிடக்கிறீர்கள் ! நீங்களெல்லோரும் ஒரு குட்டையில் ஊறின மட்டைகள்தண்டா !
மதவாதம் , இனவாதம் ஏதாவது கிளப்பிக்கொண்டே இருப்பதுதானே அம்னோ கம்பனாட்டிகளின் வேலை ! இதுவெல்லாம் கேட்டு சலிச்சி, புளிச்சி, போச்சி அடாவடி அம்னோவே !
இஸ்லாமுக்கு மட்டும் தான் மதத்தைப் பரப்புகிற வேலையோ!