சோசலிசக் கட்சி தலைவர்களுக்கு அரசாங்கமும் போலீசும் ரிம2 இலட்சம் தர வேண்டும்

Psm - RM200kஆறு சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) கட்சி தலைவர்கள் 2011 ஆம் ஆண்டில் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்காக அரசாங்கத்திற்கும் இதர 81 பிரதிவாதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்த சிவில் வழக்கில் இன்று ஓர் உடன்பாடு தீர்வு கண்டனர்.

அந்த உடன்பாடு இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஹு சியு கெங் முன்பு பதிவு செய்யப்பட்டது.

அந்த உடன்பாட்டின் அடிப்படையில் முதல் பிரதிவாதி என்ற முறையில் அரசாங்கமும், ஆறு கைது அதிகாரிகளும் ரிம200,000 மற்றும் செலவுத் தொகையும் கொடுக்க வேண்டும்.

அவரசகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அந்த ஆறு சோசலிசக் கட்சியினர் சுங்கைச் சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், சூ சோன் கை, சரத் பாபு, எம். சரஸ்வதி, எம். சுகுமாரன் மற்றும் எ.இலட்சிமனன் ஆகியோராவர்.

நீதிமன்றத்திற்கு வெளியில் பேசிய டாக்டர் ஜெயக்குமார், இது மக்களுக்கு ஒரு வரலாற்றுப்பூர்வமான நேரமாகும், ஏனென்றால் நட்ட ஈடு கட்ட சம்மதித்தின் மூலம் அரசாங்கம் அது இழைத்த தவறை ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.

மலேசிய சோசலிசக் கட்சியின் அறுவரை கைது செய்து சிறையில் அடைத்ததைத் தவறு என்று ஒப்புக் கொண்டதின் விளைவாக அரசாங்கத் தரப்பு அவர்களுக்கு ரிம 2 இலட்சமும் செலவுத் தொகையும் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது ஒரு பெரிய காருண்ய செயலல்ல. ஓர் அமைச்சரும் அவரது எடுபிடிகளும் செய்த தவறுக்காக கட்ட வேண்டிய ரிம 2 இலட்சத்திற்கு மேலான தொகையை யார் கட்டுவது?

தண்டனையாக வழங்கப்பட்ட இத்தொகையை மக்களின் வரிப்பணத்திலிருந்து கட்டக் கூடாது. இது ஒரு சிவில் வழக்கு. இந்த சிவில் வழக்கின் பிரதிவாதிகள் தங்களுடைய சொந்தப் பணத்திலிருந்து இத்தொகையைக் கட்ட வேண்டும்.

 

 

 

 

 

 

TAGS: