மாணவர்களின் ஆங்கிலமொழி தரம் குறித்து மகாதிர் கவலை

dr mமாணவர்களிடையே ஆங்கிலத்தின் தரம் தாழ்ந்து போயிருப்பது குறித்து டாக்டர் மகாதிர் முகம்மட் கவலை தெரிவித்தார். அது, அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றாரவர்.

உயர்க்கல்வி நிலையங்களில் பயின்ற பலர் அம்மொழியில் புலமை பெறவில்லை என்பதால் சரியான வேலை வாய்ப்புகளைப் பெறுவதில்லை என அந்த முன்னாள் பிரதமர் கூறினார்.

அண்மையில் 333 பட்டதாரிகள் தகவல் தொழில்நுட்ப வேலைக்கான நேர்காணலுக்குச் சென்ற ஒரு சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

“அவர்களில் எழுவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை”.

1947-இலிருந்து பகாசா மலேசியாவுக்காக போராடி வந்திருப்பதாகக் கூறிய டாக்டர் மகாதிர் ஆங்கிலத்தை ஒதுக்கிவைக்கக் கூடாது என்றார்.