கே-போப் நிகழ்ச்சிக்கான செலவு அரசு நிதி ஒதுக்கீட்டிலிருந்து செய்யப்பட்டது, அம்பிரின்

AG Ambrinகடந்த ஆண்டு, கே-போப் நிகழ்ச்சிக்காக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சு செய்த ரிம1.6 மில்லியன் செலவு அரசாங்க நிதி ஒதுக்கீட்டிலிருந்து செய்யப்பட்டது என்பதை தேசிய கணக்காய்வாளர் அம்பிரின் புவாங் நிலைநிறுத்துகிறார்.

“இச்செலவு அரசாங்க நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்தி மலேசிய இளைஞர் மன்றத்தின் வழியாகAG Ambrin1 செய்யப்பட்டது. நாங்கள் இது குறித்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இளைஞர் மன்றத்தோடு எங்களுடைய கணக்காய்வின் போது விவாதிக்கையில் எவரும் அதனை மறுக்கவில்லை.

“அதனால்தான் அவ்விவகாரம் கணக்காய்வு அறிக்கையில் எழுப்பட்டது”, என்று அம்பிரின் மலேசியாகினிக்கு மின்னஞ்சல் வழி அளித்த பதிலில் கூறியுள்ளார்.

இதனை முன்னாள் இளைஞர் விளயாட்டு துறை அமைச்சர் அஹமட் ஷாபிரி சிக் மறுத்திருந்த போதிலும், தற்போதைய அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனை “ஒப்புக் கொண்டார்”.