2012 கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 64 செலவினங்களை ஆராய்ந்த செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் அரசாங்கம் ரிம6.5 பில்லியனை விரயமாக்கி இருக்கலாம் என மதிப்பிடுகிறார்.
விரயம் செய்யப்பட்ட இந்த ரிம6.5 பில்லியன், பெட்ரோல் உதவித் தொகையில் 20 சென் குறைக்கப்பட்டதால் மிச்சப்படும் தொகையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று ஒங் கூறினார்.
“இதில் ரிம5.7பில்லியனை கூட்டரசு அரசாங்கம் வீணாக்கியது. மீதமுள்ள ரிம0.8பில்லியனை அரசுசார்பு நிறுவனங்கள் வீணாக்கின”.
அரசாங்கம் மட்டும் விவேகமாக செலவிடுமானால் ஆண்டு பட்ஜெட்டில் ரிம30பில்லியனைச் சேமிக்கலாம் என்றாரவர்.