“அன்பே சிவம்” படத்தில் ஒரு வீதி நாடகம் – மிகவும் பிரமாண்டமானது. அதை வடிவமைத்தவர் பிரளயன். தத்துவக் கூர்மையும், வர்க்கப்பிடிமானமும் கொண்ட இவர், பத்தாண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர், பத்திரிகையாளர், திரை இணை இயக்குநர் வரை எங்கெங்கோ அலைந்திருந்தாலும் அவரது ஜீவன் நாடகத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் பல கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் நாடகத்துக்கான பயிற்சி வழங்கும் இவரை அடையாளம் கண்டு மலேசிய மண்ணுக்கும் அவர் திறமை பயன் தர வேண்டும் என மை ஸ்கீல் அறவாரியமும் வல்லினமும் முனைந்துள்ளன.
தமிழில் பொதுபுத்தியில் நம்பப்படும் விடயங்களைக் கேள்வி எழுப்புபவர் பிரளயன். படைப்பாளிக்கு இருக்க வேண்டிய கூர்மையான சமூக நோக்கும் மார்க்ஸியத் தத்துவ சிந்தனை மரபும் கொண்ட இவரின் இயக்கத்தில் மலேசியாவில் முதன்முறையாக நவீன வீதி நாடகம் நடைப்பெற உள்ளது.
வீதி நாடகம் என்பது அரங்கை எதிர்ப்பார்க்காதது. மக்கள் கூடும் இடங்களில் நிகழ்த்திக்காட்டப்படுவது. மேடையில் பார்வையாளனிடம் தனித்து நிற்காமல் மக்கள் கலையாக விளங்கும் இம்முறை மலேசியாவுக்குப் புதிது எனலாம். நவீன வாழ்வில் கல்வி மாணவனின் மேல் திணிக்கும் அதிகாரத்தைக் கேள்வி எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பவுன் குஞ்சு என்ற இந்த வீதி நாடகத்தில் முழுக்க முழுக்க மை ஸ்கீல் மாணவர்கள் நடித்துள்ளனர்.
இலவசமாக பார்வையாளர்களுக்குத் திறந்துவிடப்படும் இந்த வீதி நாடகம் 13.10.2013 (ஞாயிறு) பத்துமலை பொது மண்டபம் அருகாமையில் நடைபெறும். பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு மை ஸ்கீல் அறவாரியம் மற்றும் வல்லினம் கேட்டுக்கொள்கிறது. மேல் விபரங்களுக்கு:ம.நவீன் 0163194522 |திரு தேவா 0123465212
இந்த வீதி நாடகம் 13.10.2013 (ஞாயிறு) பத்துமலை பொது மண்டபம் அருகாமையில் நடைபெற போகுதா ???
ஆமாம்
நல்ல வித்தியாசமான முயற்சி.