பினாங்கு கெராக்கான் தலைவர் தெங் சாங் இயோ, தேசிய தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை மாநில கெராக்கானில் உள்ள அனைவரும் வரவேற்பதாகக் கூறுவதற்கில்லை.
தேசிய தலைவர் பதவிக்கு தெங்கைக் காட்டிலும் சிறந்த தலைவர்கள் உண்டு என வழக்குரைஞர் பல்ஜிட் சிங் கூறினார். பல்ஜிட், செப்டம்பர் மாதம் மாநிலத் தலைவர் பதவிக்கு தெங்குடன் போட்டியிட்டுத் தோற்றவர்.
பலர், கெராக்கான் உண்மையிலேயே ஒரு பல்லினக் கட்சி என்ற அதன் பழைய நிலைக்குத் திரும்பிச் சென்று “பெரிய அண்ணன் அம்னோ”வையும் இப்போதுள்ள மாநில டிஏபி அரசையும் எதிர்த்துக் கேள்விகேட்கும் துணிச்சல் உள்ள கட்சியாக மாறுவதைக் காண விரும்புகிறார்கள் என்றும் அவர்களின் சார்பாகவே தாம் பேசுவதாகவும் பல்ஜிட் தெரிவித்தார்.
“அவர் தேசிய தலைவராகி விட்டால் பினாங்கு கெராக்கான் என்ன ஆவது? அது அவருக்கு இரண்டாம்பட்சமாகத்தான் இருக்கும்”, என்றார்.
இந்த கொண்ட ரொம்ப சரியாக்கும்
சிரிப்பாய் சிரிக்கும் கட்சிகள் பட்டியலில் ம இ கா , mca ,இப்போது கெராக்கானும் சேர்ந்து விட்டது !