கடந்த மாதம், மலாக்கா ஆலயங்களில் திருடுபோன ரிம20,000 மதிப்புள்ள பொருள்களின் தொடர்பில் போலீசார் இருவரைக் கைது செய்துள்ளனர்.
செப்டம்பர் 19-இல், பத்து பிரண்டம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி கோயிலில் எட்டு சிலைகளைத் திருடிய சந்தேகத்தின்பேரில் தஞ்சோங் கிளிங், தாமான் தாங்கா பத்துவில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மலாக்கா குற்றப் புலனாய்வு துணைத் தலைவர் சூப்பிரெண்டெண்ட் பி.ஆர். குணராஜன் கூறினார்.
இன்னொருவர் சுங்கை ஊடாங், கம்போங் பாயா ரும்புட்டில் கைதானார்.
“இரண்டாமவர் கொள்ளையிடப்பட்ட ஆலயப் பொருள்களை வாங்கி விற்பவர் எனச் சந்தேகிக்கிறோம்”, என குணராஜன் கூறினார்.
அவரிடமிருந்து எட்டு இந்து தெய்வங்களின் உருவச் சிலைகளையும் இரண்டு புத்தர் சிலைகளையும் இறைவழிபாட்டுக்குப் பயன்படும் 30 வெள்ளிப் பொருள்களையும் 36 செப்புப் பொருள்களையும் பொலீசார் கைப்பற்றினர்.
-பெர்னாமா
கோவில் பொருளை திருடியவனும் அதை வாங்கி ஆதாயத்தில்
விற்றவனும் இருவருமே திருடர்கள் .நல்ல தண்டனையாக ஆளுக்கு
ஐந்து பிரம்படியும் இருவரின் கை பெறு விரல்களையும் வெட்டி விட
வேண்டும்.மற்ற கோவில் திருடன்களுக்கு ஒரு பாடம் .
ஆலயத்தில் நிறைய நகைகள் அணியும் பூசாரிகல் ஜாக்கிரதை பூசாரியின் நகைகளை ஆலயத்திலே அபேஸ் பண்ணி விட்டான்கல் .இது உண்மை சம்பவம் .