பக்காத்தான் ரக்யாட், முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தலாம் என்ற அதன் நிலைப்பாட்டை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.
அண்மைய முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விவாதிக்க இன்று ஒன்றுகூடிய பக்காத்தான் தலைவர்கள் இதை அறிவித்தார்கள். அது பற்றி மேலும் விவரிக்க அவர்கள் மறுத்தனர்.
நெருக்கிக் கேட்டதற்கு, “முன்பிருந்த நிலைதான் இப்போதும். நாங்கள் முன்பு வெளியிட்ட அறிக்கையைப் பாருங்கள். அதில் சொல்லுக்குச் சொல் என்னால் நினைவுகூற முடியவில்லை”, என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி கூறினார்.
இவ்விவகாரம் குறித்து 2010-இல் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்த பக்காத்தான், முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை, எந்தவொரு சமயத்தையும் இழிவுபடுத்தாதவரை, பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தது.
பக்காதான் முசிலிம்களை விட அம்னோ முஸ்லிம்கள் சிரியம் முத்திரை குத்தப்பட்ட ஒரிஜினல் முஸ்லிம்கள் என்பது எப்படி உங்களுக்கு தெரியாமல் போனது..?
இந்த உலகத்தில் இஸ்லாமிய மதமும் …இருஸ்துவ மதமும் இருக்கும் வரை உலகம் அமைதி பெறுவது மிகவும் கடினம் …..இந்த இரு மத வெறியர்களையும் ஒரே வீட்டில் பூட்டி வைக்க வேண்டும் ……
நம் மத கடவுளின் பெயரை உச்சரித்து மற்ற இனத்தவர் வணங்கினால்
ஹிந்து மதம் சந்தோசப்படும் .
அப்படி நம்ம கடவுளின் பெயரை மலேசிய காருக்கு வைத்துவிட்டு பிறகு அந்த பெயர் இல்லாமலேயே கார் வெளியான கூத்து தெரியுங்களா ? உலகத்திலேயே பேர் இல்லாமல் கார் உற்பத்தியான நாடு மலேசியாதான் ! ” ஈஸ்வரா ” தான் அந்த கார் !! ” சத்ரியா ” அதுமட்டும் என்ன மலாய் மொழியா ?? ஆனா அல்லாஹ் என்றுமட்டும் யாரும் சொல்லக்கூடாது , …ஈஸ்வரா …..!!!!