தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ், பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையம் என்னும் ஆடம்பரமான மருத்துமனையின்வழி ரிம1 பில்லியனுக்குமேல் இழப்பை எதிர்நோக்கி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.
ரிம 544 மில்லியன் செலவில் கட்டப்பட்ட அம்மருத்துவமனை, ஒவ்வோர் ஆண்டும் நட்டப்பட்டு வந்திருப்பதாகவும் மொத்த நட்டம் ரிம1 பில்லியனைத் தாண்டி விட்டது எனவும் டிஏபி புக்கிட் பெண்டாரா எம்பி ஜைரில் கீர் ஜோஹாரி தெரிவித்தார்.
“2011, டிசம்பர் 31 முடிய அதற்கு ஏற்பட்ட மொத்த இழப்பு ரிம1.08 பில்லியன்”, என ஜைரில் (வலம்) ஓர் அறிக்கையில் கூறினார்.
அண்மையில், நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் பிரதமர்துறை அமைச்சர் அப்துல் வாஹிட் ஒமார், பிரின்ஸ் கோர்ட் ஒரு முன்மாதிரி மருத்துவமனை என்றும் அதை அப்படியே வைத்திருக்க பெரிய முதலீடு அவசியம்தான் என்றும் அரசாங்கம் கருதுவதாகக் குறிப்பிட்டிருந்ததை ஜைரில் சுட்டிக்காட்டினார்.
அதன் காரணமாகவே மருத்துவப் பயணத் தர நிறுவனம் “உலகின் சிறந்த மருத்துவமனை” என்று பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையத்தைக் குறிப்பிட்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறியது.
“அது ‘உலகின் சிறந்த மருத்துவமனை’யாகவே இருக்கட்டும். எப்போது இலாபகரமாக செயல்படத் தொடங்கும் என்பதுதான் கேள்வி. அது சாத்தியமில்லை என்றால் எதற்காக பொதுமக்கள் நட்டத்தில் நடக்கும் ஒரு ஆடம்பர மருத்துவமனைக்கு நிதியுதவி செய்ய வேண்டும்?”, என்று ஜைரில் வினவினார்..
சே! இப்படியெல்லாம் சொல்லக் கூடாது. நட்டம் வருவது இறைவன் செயல். இது போன்ற ஆடம்பர மருத்துவமனையை நிர்வகிக்க மலாய்க்காரர் யாரும் இல்லாத போது மருத்துவமனை என்ன செய்யும்? மலாய்க்காரர் அல்லாதாரும் நட்டத்தில் பங்கு எடுக்கத்தான் வேண்டும். எல்லாம் கடவுள் செயல்!
பல தனியார் மருத்துவமனைகள் நல்ல லாபகரமாக செயல் படும்போது,இவர்களின் நிர்வாகத்தில் உள்ளவை இப்படித்தான் இருக்கும் என்று தெரிய படுத்துகிறார்கள் போலும்.