கிழக்கு மலேசிய கிறிஸ்துவர்கள் மேற்கு மலேசியாவில் “அல்லாஹ்” சொல்லக்கூடாது, நஸ்ரி

1 nazriசாபா மற்றும் சரவாக் கிறிஸ்துவர்கள் தங்குளுடைய கூண்டுக்குள் “அல்லாஹ்” என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், மேற்கு மலேசியாவில் அச்சொல்லை அவர்கள்  தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் நஸ்ரி இன்று கூறினார்.

அல்லாஹ் சம்பந்தமாக மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு ஆதரவாக பேசிய அந்த அமைச்சர் கிழக்கு மலேசியாவின் பண்பாடு மேற்கு மலேசியாவின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது. அவ்விரண்டும் கலக்கப்படக் கூடாது என்றார்.

சாபா மற்றும் சரவாக்கில் கிறிஸ்துவர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம், ஏனென்றால் அது ஒரு நூற்றாண்டுகால வழக்கமாகும். இங்கு அவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.

“மேற்கு மலேசியாவில் அது ஒரு வழக்கம் அல்ல. அதனால்தான் நான் கிறிஸ்துவர்கள் அச்சொல்லை பயன்படுத்துவதை எதிர்க்கிறேன். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதில் எனக்கு அக்கறையில்லை”, என்று நஸ்ரி செய்தியாளர்களிடம் கூறினார்.

“இதைப் பெரிது படுத்தாதீர்கள். சாபா மற்றும் சரவாக்கிலிருந்து இங்கு வரும் கிறிஸ்துவர்கள் மேற்கு மலேசியாவின் பழக்கவழக்கங்களையும் பாரம்பரியங்களையும் பின்பற்ற வேண்டியுள்ளது”, என்று அந்த அமைச்சர் மேலும் கூறினார்.