துப்பாக்கியா? அவை கழிவறையில் காணாமல் போய்விட்டன, ஸாகிட்டின் பதில்

Guns lost 1போலீசாரின் காணாமல் 44 துப்பாக்கிகளில் சில கழிவரையில் காணாமல் போய்விட்டன, சில கொள்ளையர்களிடம் பறிகொடுக்கப்பட்டன என்று நாட்டின் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியன் சுவானின் கேள்விக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியுள்ளார்.

போலீஸ் படையின் 44 துப்பாக்கிகள் காணவில்ல என்று தேசிய கணக்காய்வாளர் அவரது 2012 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் கூறியிருந்தார்.

துப்பாக்கிகள் காணாமல் போதனதற்கு மேற்கூறிய இரு காரணங்களோடு இன்னும் மூன்று காரணங்களையும் அமைச்சர் ஸாகிட் கூறியிருந்தார். அவை: 1. ஆயுதங்கள் அலுவலகத்தில் காணாமல் போய்விட்டன. 2. ஆயுதங்கள் வாகனங்களிலிருந்து திருட்டுப் போய்விட்டன. 3. ஆயுதங்கள் போலீசார் கடமையிலிருந்த போது விழுந்து விட்டன.

ஆனால், காணாமல் போன வற்றில் ஏழு திரும்பக் கிடைத்து விட்டன.

தியன் சுவா கேட்டிருந்த நுணுக்கமாக புள்ளிவிபங்களுக்கு அமைச்சர் பதில் அளிக்கவில்லை.

Guns lost 2சொத்துக்களை கண்காணிப்பதற்கு புதிய முறை

போலீஸ் சட்டம் 1967, செக்சன் 79 இன் கீழ் ஆயுதங்களை இழக்கும் போலீசார் மீது விசாரணை நடத்த ஒரு விசாரணை குழு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் ஸாகிட் ஆயுதங்கள் “கடலில் காணாமல் போய் விட்டன” என்று அவரது பதிலில் கூறவில்லை.

ஆனால், போலீஸ் படையின் தலைவர் காலிட் அபு பாக்கர் துப்பாக்கிகள் கடலில் காணாமல் போய் இருக்கலாம்” என்று ஆணவமாக விளக்கம் அளித்திருந்தார்.

இது என்ன பொறுப்பான பதிலா?

கழிவறையில் காணாமல் போய்விட்டது, அலுவலகத்தில் காணாமல் போய் விட்டது என்று அமைச்சர் அலட்சியமாக பதில் அளித்திருப்பது குறித்து தியன் சுவா அதிர்ப்தி தெரிவித்தார்.

இந்த இலட்சணத்தில் சமீபத்தில் போலீசார் கூடுதல் அதிகாரங்கள் கோரியிருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும் என்று சுவா வினவினார்.