கம்போங் ஹாக்கா: கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்

Kampong Kakka1இன்று காலை மணி 11.30 லிருந்து நெகிரி செம்பிலான், மன்தின் ஹாக்கா கிராம மக்களின் வீடுகள் நில மேம்பாட்டாளரால் இடித்துத்தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருள்செல்வன், சுவாராம் செயல்முறை இயக்குனர் ஏ. நளினி ஆகியோருடன் டிஎபி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இன்றிரவு மணி 8.30 அளவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் கம்போங் ஹாக்கா கிராம வீடுகளை உடைப்பதில் தீவிரம் காட்டிய நில மேம்பாட்டாளரை கடுமையாகச் சாடினார். அம்மேம்பாட்டாளர் ஓர் இரக்கமற்றவர் என்றாரவர்.

TAGS: