அரசாங்கம் 2009-இலிருந்து தனியார் ஆலோசனை நிறுவனங்களின் சேவைக்காக ரிம7.2 பில்லியனைச் செலவிட்டிருக்கிறது என நேற்று, நாடாளுமன்றத்தில் பிகேஆர் கிளானா ஜெயா எம்பி வொங் சென்னுக்கு வழங்கப்பட்ட எழுத்து வடிவிலான பதிலில் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி பார்த்தால் மாதத்துக்கு ரிம125 மில்லியன் அல்லது ஒரு நாளைக்கு ரிம4 மில்லியன் செலவிடப்பட்டிருக்கிறது என வொங், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
“இந்த அளவுக்குத் தனியார் ஆலோசனை நிறுவனங்களை நம்பி இருப்பது பிஎன் தலைமைக்குப் பொதுச் சேவை ஊழியர்களின்மீது நம்பிக்கை இல்லை என்பதைத்தான் காண்பிக்கிறது”, என்றாரவர்.
இந்நாட்டில் 56 ஆண்டுகள் கல்வி திட்டங்கள் அறிவுள்ளவர்களை உருவாக்கவில்லை. ஒருநாளைக்கு 4 மில்லியன் வரை கொடுக்குக் அளவிற்கு என்ன செய்தது. எவ்வளவு பக்கேட்டுக்குள் போனது?
அப்போ இவ்வளவு காலமா 24 ஆம் புலிகேசி ராஜ்யமா ?? கிளிஞ்சது லம்பாடி லுங்கி !! முட்டாள்களின் ராஜ்யத்தில் என்ன இருக்கும் ?? பூஜ்யம் தான் !!