அடுத்த பொதுத் தேர்தலில் புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற எண்ணும் பக்காத்தான் ரக்யாட் 135 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல வேண்டும் என லிம் கிட் சீயாங் கூறினார்.
பிகேஆர், பாஸ், டிஏபி ஆகியவை ஒவ்வொன்றும் 45 இடங்களில் வெல்வதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். அப்படி வென்றால் நாடாளுமன்றத்தில் பக்காத்தானின் பெரும்பான்மை 48-ஆக இருக்கும் என அந்த மூத்த அரசியல்வாதி குறிப்பிட்டார்.
அது ஒன்றும் சாதிக்க முடியாததல்ல. மூன்றுக்கும் அந்த வலிமை உண்டு என்றாரவர்.
அவரவர் தொகுதிகளில் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால், தற்போதுள்ள தொகுதிகளும் பறிகொடுக்க நேரிடும். ஜாக்கிரதை! சென்ற பொதுத்தேர்தலில் ராக்கெட் சின்னத்தில் ஒரு பூனைக்குட்டி நின்றாலும் வெற்றி நிச்சயம். அப்படியிருந்தும் நீங்கள் போட்டியிட்ட 51 நாடாளுமன்ற தொகுதிகளில் 13 தொகுதிகளை வீணாக கைவிட்டீர்கள். இன்னும் கடுமையாக உழைத்தாலன்றி, உங்கள் இலக்கை அடைவது கடினம்.
சிங்கம் அவர்களே எதிர்க்கட்சி கடுமையாக உழைக்க வேண்டும் என்கிரிரே எப்படி ? கொஞ்சம் சொல்லுங்கள்.
எதிர்க்கட்சி கடினமாக உழைப்பது உறுதி…நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் ஒவ்வொரு கேள்விகளும் இதற்கு நல்ல உதாரணமே….மக்கள்தான் நல்ல எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாற்றத்தை கொண்டுவரவேண்டும். தேர்வு மக்கள் கையில்….
Mr . ஆசாமி, சொல்வதற்கு நிறைய உண்டு. ஒவ்வொன்றாக செல்வோமே. அக்கட்சியில் உள்ள சீன, மலாய்க்காரர்களை பிறகு பார்ப்போம். தமிழ்த்தலைவர்கள் என்ன செய்யலாம் என்று கூறுகிறேன். மாதத்திற்கு இரண்டு சீன ராக்கெட் [கையேடு] வெளியாகிறது. மலாய், ஆங்கில ராக்கெட்டும் மாதத்திற்கு ஒன்று வெளியாகிறது. அக்கட்சியில் ஆறு இந்தியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும், ஆறு மாதத்திற்கு ஒரு தமிழ் ராக்கெட்டை கொண்டு வர இயலவில்லையா? வெட்கமாயில்லை? குலா ஒரு அருமையான குப்பை. கஸ்தூரி பட்டு, ராமசாமி, சார்ல்ஸ் போன்றோர் ஓரளவிற்கு நம்பிக்கையானவர்கள். அவர்கள் இப்பணியை தொடர்ந்தால் என்ன? கட்சி வளர ஊடகம் மிகவும் முக்கியம். ஜ.சே.க.இந்திய தலைவர்கள், சீன வாக்குகளில் குளிர் காய்வதால், தமிழை உதாசீனப்படுத்துகின்றனர்.