மாற்றுத்திறனாளி செனட்டராக நியமனம்

1 pathamaமாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகப் போராடும் சமூகஆர்வலரான பத்மாவதி கிருஷ்ணா இன்று செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பத்மாவதியும் ஒரு மாற்றுத் திறனாளிதான்.  இரண்டாவது தடவையாக மாற்றுத் திறனாளி ஒருவர் செனட்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவரைப் பாராட்டிய டேவான் நெகாரா தலைவர் அபு ஸ்ஹார், “மாற்றுத்திறன் பெண்ணாக இருந்தாலும் அவையில் துணிச்சலுடன் பேச வேண்டும்”, என்றார்.

நேற்று பிறந்த நாளைக் கொண்டாடிய பத்மாவதி இந்நியமனம் தமக்குக் கிடைத்த “சிறந்த பிறந்த நாள் பரிசு” என்றார்.

“செனட்டில் மாற்றுத்திறனாளிகள் விவகாரங்களை எடுத்துச்சொல்வதற்கு முன்னுரிமை அளிப்பேன்”, என்றாரவர். 35 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக போராடிவரும் பத்மாவதிக்கு மெண்டரின் உள்பட ஆறு மொழிகளில் பேசத் தெரியும்.

முதன்முதலாக செனட்டராக நியமனம் செய்யப்பெற்ற மாற்றுத்திறனாளி  இஸ்மாயில் முகம்மட் சாலே. கண்பார்வையற்றவரான அவர், 2007-இல் செனட்டராக நியமனம் செய்யப்பட்டார். 2009-இல் அவர் காலமானார்.