கார்களுக்கு 12-ஆண்டு வரம்பு கட்டுவது குடும்பங்களைக் கடனாளிகளாக ஆக்கிவிடும்

1 carகார் கடனைக் கட்டி முடிக்கவே ஒன்பதாண்டுகள் ஆகிறது என்கிறபோது,  12 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கார்கள் பாதுகாப்பற்றவை என்ற விதி நடைமுறைப்படுத்தப்பட்டால் “பல ஆயிரம் மலேசியர்கள்” பாதிக்கப்படுவர்  என்கிறது பிகேஆர்.

“அதன்படி கார் கடனைத் திருப்பிச் செலுத்திய மூன்றாண்டுகளிலேயே அவர்கள் இன்னொரு கடனை எடுக்க வேண்டி இருக்கும்”, என பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி ஓர் அறிக்கையில் கூறினார்.

1 car 1குறைந்த வருமானம் பெறுவோர்தான் அதனால் மோசமாக பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் குறைந்த விலையில் விற்கப்படும் பழைய கார்களைத்தான் வாங்கக்கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களின் கார்கள் 12 ஆண்டுகள் ஆனதும் பாதுகாப்பானவை அல்லவென்றாகி விடும்.

அந்த விதி அமலுக்கு வந்தால், கார்கள் பாதுகாப்பானவை அல்லவென்றாகி, அவற்றைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்றான பின்னரும் அவர்கள் கார் கடனை மட்டும் தொடர்ந்து செலுத்திக் கொண்டிருப்பார்கள் என்று ரபிஸி குறிப்பிட்டார்.