ஒங்: மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது உறுதி; பின்வாங்க மாட்டேன்

1 ongமுன்னாள் மசீச தலைவர் ஒங் தி கியாட், தாம்  எதிர்வரும் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதினின்றும் பின்வாங்கப்போவதாகக் கூறப்படுவதை மறுத்தார்.

தம் முடிவு அறுதியானது என்றுரைத்த ஒங்,  நாடு முழுக்க பயணம் செய்து பேராளர்களின் ஆதரவைத் தேடிக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

முடிவு உறுதியானது என்பதைக் காண்பிக்க ஒங், கோழி தலையை வெட்டி சத்தியமெல்லாம் செய்ய மாட்டார்.

“கிட்டதட்ட அதைச் செய்திருப்பேன். ஆனால், நான் பெளத்த சமயத்தைச் சேர்ந்தவன். உயிர்களைக் கொல்லக்கூடாது”, என்றாரவர்.