பெண்களைச் சொத்துக்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பதவி விலகிச் செல்லும் மசீச மகளிர் தலைவர் இயு சொக் தவ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தெங்கு அட்னான் அவ்வாறு கூறியது மகளிரைச் சிறுமைப்படுத்துகிறது என்றாரவர்.
“ஒரு பெண்ணின் மதிப்பு அவரின் திறமையையும் ஆற்றலையும் பொறுத்துள்ளது. அவர் செய்துகொள்ளும் ஒப்பனையில் அல்ல.
“பெண்களாகிய நாங்கள் பொருள்களோ சொத்துக்களோ அல்ல. அது பொருத்தமற்ற ஒப்பீடு”, என்று இயு செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று கோலாலும்பூரின் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வை நியாயப்படுத்திப் பேசிய கூட்டரசு பிரதேச அமைச்சரான தெங்கு அட்னான் பெண்களை சொத்துக்களுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
சொத்துக்களின் மதிப்பைக் கூட்டினால் அவற்றின் விலை அதிகரிக்கும் என்று கூறியவர், “சொத்துக்களும் பெண்களும் ஒன்றுதான். மேக்-அப்(ஒப்பனை) இல்லையென்றால் விலை குறையும். மேக்-அப் போட்டிருந்தால் விலை கூடும்” என்றார்.
ஆஹா என்ன மடயண்டா இவன் டெங்கு அட்னான் இவன் மொல்லையில் போவ இவன் மூலையில் பெண்களும் sexumthan இருக்கோமோ கேனயன் சட்டி மடையன் சாக்கடை பேயன்தான் இந்த மாதிரி கூறுவான் MIC பெண்கள் UMNO பெண்கள் வெட்கமே இல்லாத மானமே இல்லாத ஜடங்கள் இந்த அறிக்கைக்கு TENGKU அட்னான் கையை முத்தமிட்டு அவன் காலை கழுவி நீரை குடிப்பாலுக ஆனால் MCA பெண்கள் ஆவேசமுடன் முழங்க ஆரம்பித்து விட்டனர் .
தெங்கு அட்னான் கூறியதில் தப்பே இல்லை!!!
அவர் இஸ்லாமியப் பெண்களைப் பற்றிப் பேசுகிறார் என்பதாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமியக் கலாச்சாரத்தை எதிர்க்க நாம் யார்? அம்னோவின் கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டாம்!
உலக மஹா அறிவாளி யாராலும் கண்டுபிடிக்காத விசயத்தை இந்த மேதை கண்டுபிடித்துவிட்டார் .