கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் பாடில் மார்சுஸ் கூறுகையில், சந்தேக நபர் 40 வயதைக் கடந்தவர் என்றும், அவர் ஒரு அரசு ஊழியர் என்றும், பாடம் கற்பிப்பதற்காக அவரது வீடு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக ஐந்து புகார்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனிப்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் பாடில் மார்சஸ் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஒருவர், இம்மாத தொடக்கத்தில் ஐந்து மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் அக்டோபர் 21ஆம் தேதி வரை ஆறு நாட்கள் காவலில் வைக்கப்படுவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40 வயதைக் கடந்தவர் என்றும், அவர் ஒரு அரசு ஊழியர் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் பதின்ம வயதினர் என்றும் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் பாடில் மார்சஸ் இன்று உறுதிப்படுத்தினார்.
நேற்று, சந்தேக நபரின் வீட்டில் இந்தச் சம்பவங்கள் நடந்ததாகக் கூறி ஐந்து புகார்கள் கிடைத்ததைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக பாடில் தெரிவித்திருந்தார். அந்த வீடு தனியார் பயிற்சி மையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். இந்த விசாரணைக்கு மாணவர்கள் பயிலும் பள்ளியும், மாவட்டக் கல்வி அலுவலகமும் உதவி செய்து வருகின்றன.
இவ்வழக்கு, இயற்கைக்கு மாறான பாலியல் உறவு தொடர்பான குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 377C மற்றும் குழந்தைகளுக்கு எதிரான உடல் ரீதியான பாலியல் அத்துமீறல் தொடர்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14(a) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
























