சாலைக்கட்டண உயர்வு, அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவையே திருப்பி அடிக்கப்போகிறது என ரித்வான் டீ அப்துல்லா எச்சரித்துள்ளார்.
டோலை உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவால் “குழப்பமடைவதாக” அந்தக் கல்வியாளர் கூறினார்.
“1மலேசியா என்று சொல்லி ‘மக்களுக்கு முன்னுரிமை, அடைவுநிலைக்கு முக்கியத்துவம்’ என்று முழக்கமிட்டதன் அர்த்தம் என்ன? தேர்தலின்போது மட்டும்தான் மக்களுக்கு முன்னுரிமையா?”, என ரித்வான் சினார் ஹரியானில் கேள்வி எழுப்பி இருந்தார்.
மக்களுக்குச் சுமையை உண்டுபண்ணாமல் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்த மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
“இத்தனை விலை உயர்வுகளை மக்களால் எப்படிச் சமாளிக்க முடியும்? BN என்றால் ‘Barang Naik’என்கிறார்களே, அதுதான் உண்மையோ?”, எனவும் அவர் வினவினார்.
வித்தால வில்லி விறகெடுக்க போனாளாம், குத்தாத முள்ளு கொத்தோட வந்துச்சாம் …..டேய் … டேய்… போதும்டா உங்க நாடகம்..எல்லாம் ஒரே குட்டையிலே ஊறின மட்டையிங்க தானே நீங்க ….
ஆஹா, அழகியின் முத்தான பழமொழி குத்தோன்னு குத்துது.
“1மலேசியா என்று சொல்லி ‘மக்களுக்கு முன்னுரிமை, அடைவுநிலைக்கு முக்கியத்துவம்’ என்று முழக்கமிட்டதன் அர்த்தம் என்ன?
அழகி சரியாக சொன்னீர் .. எழுத்து .கதை, திரைக்கதை, வசனம் ,டைரேக்சியன் எல்லாமே இவர்கள்தான் .பாவம் மக்கள் ரசிக்கத்தான் முடியவில்லை.
தேவைப்படும்போது காலைப்புடிக்கிறதும் பிறகு உதைப்பதும் பி எண்ணின் பழக்கம்தானே
நஜிப் எழுதி கொடுத்த வசனத்தை இவர்கள் ஒப்புவித்துக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரம் தேடிக்கொள்ள இதுதானே வாய்ப்பு. அம்னோ அரசியல் வாதிகள் “சுட்ட” மில்லியன்களை கண்டுபிடித்தாலே மலேசியாவின் பாதி கடனை திருப்பி செலுத்தி விடலாம். பி.டி.பி.டி.என், மாரா, கொடுத்த கடன், அம்னோ அரசியல் வாதிகளின் பிள்ளைகளுக்கு கடன், இப்படி கொடுக்கப் பட்ட கடன்களை திரும்பப் பெறுவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. இவர்களின் கடன்களை மக்கள் மூலமாக பெறுவதற்கு விலை ஏற்றம்தானே ஒரே வழி.
ஜனவரி 2014 பல வரிகளோடு பிறக்கிறது. மக்களுக்கு சுமை அதிகம். அரசாங்கம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். வசதியானவர்களுக்கு ஓ.கே. ஆனால் மற்றவர்களுக்கு?