பொருள்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் டிசம்பர் 31 பேரணியை “அரசாங்கத்தைக் கவிழ்க்கும்” பேரணி என முத்திரை குத்துவது பேரணியின் உண்மையான நோக்கத்திலிருந்து “கவனத்தைத் திருப்பும்” முயற்சியாகும் என துருன் தலைவர் அஸான் சபார் கூறினார்.
“நாங்கள் அமைதியாக ஒன்றுகூடுவோம். சினமூட்டும் வகையில் நடந்து கொள்ள மாட்டோம். அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை எழுப்ப மாட்டோம்”, என்றவர் மலேசியாகினி நேர்காணலில் தெரிவித்தார்.
“அவ்வாறு கூறுவோர் உண்மையான விவகாரத்திலிருந்து கவனத்தைத் திருப்பப் பார்க்கிறார்கள்”, என்றாரவர்.
அரசு கவில்கதான் செய்யணும் அதுதான் இறை தர்மம்
நம் சொன்னது அரசை அரசு அல்ல
மக்களின் கவனத்தை திசை திருப்புவதைத் தானே பி என் கடந்த காலங்களில் மிகவும் திறமையாக செய்துக் கொண்டிருக்கிறது. இதில் என்ன சந்தேகம்? மற்றும் மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை மக்கள் கவிழ்க்க நினப்பது அவர்கள் உரிமைதானே!