உங்கள் கருத்து ‘குத்தகைகளுக்கு வெளிப்படையான டெண்டர்முறை கிடையாது, அம்னோ அல்லக்கைகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது- எல்லாம் மகாதிர் ஆட்சியின் எச்சங்கள்’
விலைகளை உயர்த்தாமல் செலவுகளைக் குறைப்பீர்: அரசாங்கத்துக்கு மகாதிர் அறிவுறுத்தல்
விழிப்பானவன்: செலவுகளைக் குறைக்க முடிந்தால் எந்தத் தொழிலதிபராவது குறைக்காமல் இருப்பாரா?
சுயேச்சை மின் உற்பத்தியாளர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒரு தரப்புக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் ஒப்பந்தங்களைத் திருத்தாமலும் சரிசெய்யாமலும் வைத்துக்கொண்டே எரிபொருள் செலவைக் குறைக்கச் சொன்னால் எப்படிக் குறைப்பது? நெடுஞ்சாலைகள் பராமரிப்பு அம்னோவுக்கு வேண்டப்பட்டவர்களின் ஏகபோக உரிமையாக இருக்கும்போது போக்குவரத்துச் செலவைக் குறைப்பது எப்படி?
அரிசி, சீனி, மாவு போன்ற அத்தியாவரியப் பொருள்களுக்கான உதவித் தொகைகள் குறைக்கப்பட்டு அவற்றின் இறக்குமதி மற்றும் விநியோகம் மட்டும் ஒரு சிலரின் ஏகபோக உரிமையாக இருக்கும்போது அவற்றின் விலையைக் குறை, குறை என்றால் எப்படிக் குறைப்பது?
வர்த்த்கர்கள் மூலை முடுக்கில் எல்லாம் அரசியல்வாதிகளைக் கவனிக்க வேண்டி இருக்கும்போது பரிவர்த்தனைச் செலவுகளைக் குறையுங்கள் என்றால் அவர்களால் எப்படிக் குறைக்க முடியும்?
பின்பக்கம் தேய கடுமையாக உழைப்போருக்கு சம்பளத்தைக் கிள்ளிக் கொடுத்து ஒன்றுமே செய்யாதிருப்போருக்கு சம்பளத்தை அள்ளிக் கொடுக்கும் நிலை இருக்கும்போது பணவீக்கத்தைத்தான் எப்படிக் குறைப்பது?
விழித்துக்கொண்டவன்: முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி, செலவைக் குறைப்பதற்காக பெருந் திட்டங்கள் சிலவற்றை இரத்துச் செய்தபோது அவரைக் குறை சொன்ன டாக்டர் மகாதிர்,. பின்னர் வந்த நஜிப் அப்துல் ரசாக் வாரி இறைத்துச் செலவு செய்யத் தொடங்கியதும் மகிழ்ச்சியுடன் அதை வரவேற்றார்.
இப்போது நஜிப் கடந்த ஐந்தாண்டுகளில் ரிம300 பில்லியன் பற்றாக்குறை ஏற்படும் அளவுக்குச் செலவு செய்துவிட்ட நிலையில் செலவுகளைக் குறைத்துக்கொள்ளச் சொல்கிறார். குபீரென பல பொருள்களும் கட்டணங்களும் விலை உயர்வதைக் கண்டு அம்னோ அமைச்சர்களும் அம்னோ-ஆதரவு என்ஜிஓகள்கூட அதிருப்தி அடைந்திருப்பதை மகாதிர் உணர்ந்திருக்க வேண்டும். அதுதான் இந்தத் திடீர் பல்டி.
பிரான்கோ: துன் அவர்களே! இதைத்தானே உங்களிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் பாக் லா செய்தார்? அவரைச் செய்ய விட்டீர்களா? விட்டிருந்தால் மக்கள் இந்த நிலைக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.
பெயரிலி#23456263: முதலை மக்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறதா? நேரடியாக குத்தகைகள் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? அதுதானே திட்டங்களின் செலவுகள் பெருகக் காரணமாக இருந்தது.
பல இனவாதி: குத்தகைகளுக்கு வெளிப்படையான டெண்டர்முறை கிடையாது, அம்னோ அல்லக்கைகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது- எல்லாம் மகாதிர் ஆட்சியின் எச்சங்கள்.
எம்ஏஎஸ்ஸுக்கு (மலேசிய விமான நிறுவனம்) தாஜுடின் ரம்லியைக் கொண்டு வந்து மக்களின் வரிப்பணத்தை பில்லியன் கணக்கில் விரயமாக்கினாரே அதை மக்கள் மறந்து விட்டார்கள் என்ற நினைப்பில் பேசுகிறாரா?
புரோட்டோன் நிறுவனத்தை உயிருடன் வைத்திருக்கவும் மகாதிர் மற்றும் அம்னோவின் ஈகோவைப் பாதுகாக்கவும் கோடிக்கணக்கில் பணம் விரயமாக்கப்பட்டதை நாம் மறந்து விட்டோம் என்று நினைக்கிறாரா?
ஏமாற்றுவோரை எதிர்ப்பவன்: நெஞ்சம் முழுவதும் வஞ்சத்தைத் தேக்கி வைத்திருப்பவர் ‘rakyat sudah lupa’என்று நினைக்கிறார் போலும்.
வெர்சே: மகாதிர் அவருடைய ஆட்சியின்போதுதான் ஏறுமாறான நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன என்பதை மகாதிர் வசதியாக மறந்து விட்டார். அது மட்டுமா, மலேசியாவின் பிரம்மாண்டமான ‘வெள்ளை மாளிகை’, புரோட்டோன்….. இப்படி இன்னும் எத்தனையோ. பேரி வேய்ன் அவரது ‘Malaysian Maverick’ என்னும் நூலில் நீண்ட பட்டியலையே கொடுத்திருக்கிறார்.
வாழ்த்துக்கள் காக்க அவர்களே! நீங்கள் கொள்ளையடித்த பணத்தை எல்லாம் திரும்ப மக்களிடமே ஒப்படைப்பதற்கு மிக்க நன்றி,அப்படியே உங்கள் கொள்ளை கூட்டத்தையும் பின்பற்றுமாறு உத்தரவு போடுங்கள் நன்றி………………
தன் வினை தன்னை சுடும் ,
சூடும் உமது உருவாக்கத்தின் சரிவுகள் , அழிவுகள் …!
வசதி உள்ளவர்கள் சிக்கனமாக செலவு செய்யலாம் அனால் வசதி குறைந்தவர்கள் அதிய வசிய செலவை எப்படி குறைப்பது
மகாதிர் அவர்களே,செலவைக் குறைப்பதா; எப்படி? எப்படி ? எப்படி ?? ஆ ,,கழியும் கஞ்சியையும் ,பாளை சொத்தையும் சாப்பிட்டால் சிலவை குறைக்கலாம் என்று ,மாஹதிர் நினைக்கிறார் !!!சுத்தம்
நமது பட்ஜெட்டில் முக்கால் வாசி ஒதுக்கீடு நாட்டை நிர்வகிப்பதற்கு செலவிடப் படுகிறது. இந்நாட்டில் அதிக செலவு பொதுசேவை ஊழியர்களை மேய்ப்பதற்கு பயன்படுத்தப் படுகிறது. பிறகு எப்படி குறைப்பது.
செலவை குறைக்கனும்டானே அவன் அவன் மவன் குடும்ப பெயரில் நம்ம காக்கா சொறியன போல சொத்து வாங்கி வைச்சுட்டா செலவை குறைபதர்க்கான வழியாம் எப்படி ஓகேவா ?