‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தும் விவகாரம் பதற்றமிக்க சூழல் உருவாக்கி இருந்தாலும் அரசுப் பணியாளர்கள் அமைதியாகச் செயல்பட்டு சமூகங்களிடையிலான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வலியுறுத்தினார்.
இன்று காலை பிரதமர்துறை ஊழியர்களிடையே மாதாந்திர உரை நிகழ்த்திய நஜிப், அப்படிப்பட்ட பிரச்னைகள் மிகவும் பாடுபட்டு உருவாக்கிய நாட்டின் நல்லிணத்தைக் கெடுப்பதற்கு இடமளிக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.
“பிரச்னைகள் எதிர்படும்போது அவற்றுக்குத் தீர்வுகாண்பதில் உணர்ச்சிகளுக்கு இடமளித்து விடக்கூடாது. சட்டத்தைப் பின்பற்றியும் உரையாடல் வழியிலும் பக்குவமாக, அமைதியாக அவற்றுக்குத் தீர்வுகாண வேண்டும்”, என்றாரவர்.
பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டில் ஆட்டுகிறார்.!
பிரச்னை என்று வந்ததும் உடனடியாக தலையிட்டு முற்றுப் புள்ளி வைத்திருக்க வேண்டும்..? தொடர விட்டால் இப்படிதான் பதற்றத்துக்கு கொண்டு விடும்..?
நாட்டில் விலைவாசி எஆன்றம், மக்கள் நினைகுடது.. விவாதிக்க கூடது.. என திசை திறப்பேவே இத்த இனம் உரிமை குழப்படி அரசாங்கம் உருவாக்கி இருக்கு. இது அரசாங்கத்தின் datharam .