பிரபல வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா வழக்குரைஞர், ஒழுங்கு வாரியம் அவருக்கு விதித்த ரிம5,000 அபராதத்தைத் தள்ளுபடி செய்ய நீதிமன்றத்தில் செய்திருந்த முறையீடு வெற்றிபெறவில்லை.
வழக்குரைஞர் தொழில் ஒழுங்குவிதியை மீறினார் என்பதற்காக 2012, செப்டம்பரில் வாரியம் அவருக்கு அந்த அபராதத் தொகையை விதித்திருந்தது.
“வழக்குரைஞர் மன்றத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல என நினைக்கிறேன். அதனால் முறையீட்டைத் தள்ளுபடி செய்கிறேன்”, என்று கோலாலும்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி சலேகா யூசுப் கூறினார்.
நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஷாபி மேல்முறையீடு செய்வார் என அவரின் வழக்குரைஞர் சரா அபிஷேகம் தெரிவித்தார்.