புத்தாண்டுக்கு முதல்நாள் விலை-உயர்வை எதிர்த்து பேரணி நடத்தியவர்களைக் கொல்வது தப்பில்லை என்று கூறிய பேராக் முப்தி ஹருஸ்ஸானி ஜக்கரியாவிடம் போலீசார் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்து விட்டனர்.
“அதில் (தேசியப் பாதுகாப்புக்கு) மிரட்டல் விடுவதாக எதுவும் இருக்குமானால் அதன்மீது விசாரணை நடத்தப்படும்.
“குறிப்பிட்ட சிலர்தான் பாதுகாப்புக்கு மிரட்டல் என்பதில்லை. எல்லாரையுமே விசாரிப்போம். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட சிலரை மட்டுமே பார்க்கிறீர்கள்”, என போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் காலிட் இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார். .
அதைத்தான் நாங்களும் சொல்லுகிறோம். குறிப்பிட்ட சிலரை மட்டுமே ஏன் பார்க்கிறீர்கள்? ஏற்கனவே முப்தியிடம் வாக்குமூலம் பதிவாகிவிட்டது என்பதை எல்லாம் நாங்கள் நம்ப வேண்டும், அப்படித்தானே! எதிர்கட்சியினர் பிரச்னையை எழுப்பிய பிறகு தான் நீங்கள் செயல்படுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாதா!
இதெல்லாம் வேலைக்கு ஆகாது பாஸ்.. வேற ஏதாவெது நல்ல கதை இருந்தா சொல்லுங்க..
இவன் எப்படி தலைமை காவல் அதிகாரியானான்?
இவனுக்கு என்ன தகுதி தரம் ? எல்லாம் கொ………டை தூக்கிகள். இந்த அம்னோ அரசியலில் தரம் தகுதி தேவை இல்லை. இந்நாட்டில் எவ்வளவோ மாற்றம்– கெட்ட மாற்றம் கடந்த 33 ஆண்டுகளில். ஒரு காலத்தில் மலாய்க்காரன் அல்லாதவர்கள் உயர் பதவியில் இருந்தனர் –ஆனால் தற்போது? இதே நிலைதான் எல்லா துறைகளிலும். கையால் ஆகாத தரமில்லா மடையர்களிடம் நாம் இவங்களுக்கு கீழே கடமையாற்ற வேண்டும். இல்லாவிடில் வாழவே சிரமம்.