சீபோர்ட் தமிழ்ப்பள்ளி: வகுப்புகளை நடத்த பெற்றோர்களே ஏற்பாடு செய்கின்றனர்

 

Seaport Tamil school5சீபோர்ட் தமிழ்ப்பள்ளி இதுவரையில் கிளானாஜெயாவில் இயங்கிய இடத்திலேயே நிலைநிறுத்துவதற்காக போராடி வரும் பெற்றோர்கள் அப்பள்ளியில் பாட வகுப்புகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யவிருக்கின்றனர், ஏனென்றால் சிலாங்கூர் மாநில கல்வி இலாகா அப்பள்ளியில் வகுப்புகளை நடத்துவதற்கு ஆசிரியர்களை தர மறுத்து விட்டது.

இன்று பின்னேரத்தில் துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் மாணவர்கள் 9 கிலோ மீட்டர் தொலைவில் கம்போங் லிண்டுங்கானில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கு சென்றேயாக வேண்டும் என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆட்சேபக் கூட்டத்திற்கு பின்னர் பெற்றோர்கள் இம்முடிவை எடுத்தனர்.

இந்தப் பள்ளி இருக்கும் நிலம் மாநில அரசின் பிகேஎன்எஸ்சுக்கு சொந்தமானதால், இந்நிலத்தை தமிழ்ப்பள்ளிக்கானது என்று அரசு பதிவேட்டில் பதிவு செய்ய தயாராக இருப்பதாக சிலாங்கூர் மாநில அரசு அறிவித்திருந்திருந்த பின்னரும் இம்முடிவு எடுக்கப்பட்டது.

“எங்களிடம் பாடபுத்தகங்கள் இருக்கின்றன; மேசைகள் இருக்கின்றன. கல்வி அமைச்சு எங்களுக்கு உதவ மறுத்தால், அவர்கள் இல்லாமலேSeaport Tamil school6 மக்களின் உதவியுடன் நாங்களே தொடங்குவோம்”, என்று மலேசிய தமிழன் டுடே வெல்பேர் அசோசியேசன் தேசியச் செயலாளர் கே.குணசேகரன் கூறினார்.

பொங்கலுக்கு பின்னர்  தொடங்கும் பாட வகுப்புகளை வழக்கமான முறையில் தானும் இதர தன்னார்வல தொண்டர்களின் உதவியோடு நடத்த முடியும் என்று முன்னாள் ஆசிரியரான குணசேகரன் கூறினார்.

இதுவரையில் பள்ளிக்கு அருகில் கூடாரத்தில் நடத்தப்பட்ட பாட வகுப்புகளில் கலந்து கொண்ட 24 மாணவர்களும் இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. பள்ளிக்கூடம் மூடப்பட்டிருந்த போதிலும் அவர்களுக்கு பள்ளிவளாகத்தில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

“இது பிகேஎன்எஸ்சுக்கு சொந்தமான நிலம். சிலாங்கூர் மாநில அரசு பள்ளிக்கு சரி என்று சொல்லி விட்டது. பின்னர், நாங்கள் ஏன் அதனை பயன்படுத்தக்கூடாது”, என்றாரவர்.

“நடப்பு தலைமையாசிரியர்”

Seaport Tamil school7பள்ளியின் நடப்பு தலைமையாசிரியராக ஜி.முருகேசை (இடம்) ஏற்றுக்கொள்ள மாணவர்களின் பெற்றோர்கள் தீர்மானித்துள்ளனர்.

2003 – 2007 ஆண்டுகள் வரையிலும் பின்னர் 2009 – 2011 ஆண்டுகள் வரையில் ஒப்பந்த அடிப்படையில்; சீபோர்ட் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியிருந்த முருகேசு, நெகிரி செம்பிலானில் ஒரு தமிழ்ப்பள்ளியின் தலைமையாரியராக பணியாற்றியிருந்திருக்கிறார்.

கம்போங் லிண்டுங்கானிலுள்ள புதிய கட்டடத்திற்கு தங்களுடைய பிள்ளைகள் மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பெற்றோர்கள் இதனால் ஏற்படும் கூடுதல் போக்குவரத்து செலவை குறைந்த வருமானம் பெறும் தங்களால் தாங்க முடியாது என்று கூறுகின்றனர்.

மாணவர்கள் முறையாக தங்களுடைய பாடங்களை கற்பதற்கு ஏதுவாக இதுவரையில் இருந்த பள்ளிக்கே அதன் உரிமத்தை மீண்டும் அளிக்குமாறு முருகேசு கல்வி அமைச்சை கேட்டுக் கொண்டார்.

“சீபோர்ட் பள்ளியின் பெயர் கடத்தப்பட்டது”

இதனிடையே, சீபோர்ட் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட போவதாக கூறப்பட்ட Seaport Tamil school8பள்ளி கட்டி முடிக்கப்பட்ட போது அதற்கு முதலில் கொடுக்கப்பட்ட பெயர் எஸ்ஜேகே (டி) கம்போங் லிண்டுங்கான் என்பதாகும். ஆனால், அப்பள்ளி நிலைத்திருப்பதற்காக, பின்னர் சீபோர்ட் பள்ளியின் பெயரும் அதன் உரிமமும் “கடத்தப்பட்டது”, என்றார் முன்னாள் இண்ராப்பின் ஆர்.கண்ணன் குறிப்பிட்டார்.

“இது பகல் கொள்ளை…அரசாங்கம் சீபோர்ட் பள்ளிக்கு அதன் உரிமத்தை திருப்பித் தர வேண்டும் அல்லது கம்போங் லிண்டுங்கானிலுள்ளதற்கு ஒரு புதிய உரிமத்தை கொடுக்க வேண்டும்”, என்றாரவர்.

டாமன்சாரா சீனப்பள்ளி நடவடிக்கை குழுவின் ஆதரவு

சீபோர்ட் தமிழ்ப்பள்ளி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக எஸ்ஜேகே (சி) டாமன்சாரா “Save Our School” நடவடிக்கை குழுவின் ஆலோசகர் போக் தாய் ஹீ அங்கிருந்தார்.

இன்று சீபோர்ட் தமிழ்ப்பள்ளி எதிர்கொண்டுள்ள அதே சூழ்நிலைக்கு 2001 ஆம் ஆண்டில் எஸ்ஜேகே (சி) டாமன்சாரா தள்ளப்பட்டு மூடப்பட்டபோது இந்த “Save Our School” நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது.

ஆளும் கூட்டணி சீன வாக்காளர்களின் ஆதரவை பெருமளவில் இழந்த பின்னர், 2009 ஆம் ஆண்டில் அப்பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்பட்டது.