நஜிப்-ஆதரவு பேரணியாக இருந்தாலும் சட்டத்தைப் பின்பற்றத்தான் வேண்டும்

polisபேரணி  நடத்துவோர்  பிஎன்னைச்  சேர்ந்தவர்களோ,  பக்காத்தான்  சேர்ந்தவர்களோ  ஒரே  வகை  நியாயம்தான்  கடைப்பிடிக்கப்படுகிறது  என்கிறார்  பினாங்கு  போலீஸ்  தலைவர்  அப்துல் ரகிம்  ஹனாபி.

பிஎன்,  பக்காத்தான் ரக்யாட்  பேரணி  ஏற்பாட்டாளர்களிடம்  போலீஸ்  வெவ்வேறு  விதமாக  நடந்துகொள்கிறது  என்று  கூறப்படுவதை  அவர்  மறுத்தார்.

ஞாயிற்றுக்கிழமை,  செபராங்  ஜெயா,  பண்டார்  சன்வே-யில்  விலை  உயர்வுக்கு  எதிராக  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள  துருன்  பேரணிக்கு  முறையான  அனுமதி  இல்லை  என்றால்  அதன்  ஏற்பாட்டாளர்கள்  அமைதிப் பேரணி  சட்டத்தின்படி   கைது  செய்யப்படுவர்  என்றாரவர்.

“அவர்களும்  சட்டத்தைப்  பின்பற்ற  வேண்டும்.  10  நாள்களுக்குமுன்  போலீசுக்குத்  தெரியப்படுத்த  வேண்டும்”,  என்றவர்  மலேசியாகினியிடம் கூறினார்.

பொருள்களின்  விலை  உயர்வுக்கும்  பொருள்,  சேவை  வரிக்கும்  எதிர்ப்புத்  தெரிவிக்க  என்ஜிஓ-கள்  கூட்டாக அப்பேரணிக்கு  ஏற்பாடு  செய்துள்ளன.