இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் அவரது அமைச்சு சம்பந்தப்பட்ட விவகாரங்களை மட்டுமே கவனிக்க வேண்டும், ‘அல்லாஹ்’ விவகாரத்தில் கருத்துரைக்க அவருக்கு அதிகாரமில்லை என மலாய் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசா கடுமையாக இடித்துரைத்துள்ளது.
“புத்ரா ஜெயா பேச்சாளராக மாற வேண்டாம். நீங்கள் இளைஞர், விளையாட்டு அமைச்சர் மட்டுமே. பிரதமரோ சமய விவகார அமைச்சரோ அல்ல”, என பெர்காசா செயலாளர் சைட் ஹசன் அலி நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.
மலாய்மொழி பைபிள்களில் ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்துவதன் தொடர்பில் அமைச்சரவை 2011-இல் காணப்பட்ட 10-அம்ச தீர்வையே பின்பற்றுவதாக கைரி கூறியதற்கு எதிர்வினையாக அவர் இவ்வாறு கூறினார்.
அரசாங்கம் தொடுத்த 10 அம்ச தீர்வைப்பற்றி கருத்துரைக்க அரசாங்க தொடர்புடைய அமைச்சருக்கு அதிகாரம் இல்லையாம் . ஆனால், அரசு தொடர்பில்லா இந்த பெர்காசா அமைப்பு மட்டும் பேசலாமா??? இதற்குப் பெயர்தான் மாங்கா மடையர்களோ!!!!!
இதற்க்கு பெயர் இன அரசியலும் அம்னோ/மலாய் காரன் மத வெறியும்
ஆமாம். கைரி அவரின் அமைச்சர் வேலையை மட்டும் பார்க்கட்டும்; நாங்கள் இந்த நாட்டின் பல்லின மக்களின் பரஸ்பர இனவுணர்வுக்கு குந்தகம் உண்டாக்கி, மலாய்க்காரர்களின், இஸ்லாமின் மேலாதிக்கத்தை நிலை நாட்ட முயல்கிறோம்.