தேர்தல் வெற்றியில் கவனம் செலுத்துவீர்: அம்னோவுக்கு நூர் ஜஸ்லான் அறிவுறுத்தல்

nurபூலாய்  எம்பி, நூர்  ஜஸ்லான் முகம்மட்,  பினாங்கு  அம்னோ  மே 13 கலவரத்தைக் காண்பித்து  பூச்சாண்டி  காட்டுதல்  போன்ற  அச்சுறுத்தல்  தந்திரங்களைக்   கைவிட்டு  தேர்தலில்  வெற்றிபெறுவதில்  கவனம்  செலுத்த  வேண்டும்  என  அறிவுரை  பகர்ந்துள்ளார்.

அப்படிப்பட்ட  தந்திரங்கள்  ஏற்கனவே  பயன்படுத்தப்பட்டவைதான்.  ஆனால்,  பொதுத்  தேர்தலில் பினாங்கில்  அம்னோவுக்குத்  தொடர்ந்து  வீழ்ச்சிதான்.

“சரவாக் (முதலைமைச்சர்)  அப்துல் தாயிப்  முகம்மட்  போல்  இருக்க  வேண்டும்.   அவரைப் பற்றி  என்னவெல்லாமோ  சொல்லப்பட்டிருக்கிறது.  ஆனால்,  முடிவுகள்  மட்டும்  எப்போதும்  பிரமாதம்தான்.  (அவரது  கட்சி)  பெசாகா  பூமிபுத்ரா பெர்சத்து (பிபிபி) 35  இடங்களில்  தனித்துப்  போட்டியிட்டது. 35-இலும்  வென்றது.

“இங்கே  நாம்  என்னென்னவோ  சொல்கிறோம், வாய்க்கிழிய  கத்துகிறோம்,  அங்கே  மிரட்டுகிறோம், இங்கே  மிரட்டுகிறோம்.  ஆனால்,  மக்கள்  வாக்களிக்கச்  செல்லும்போது    எதிரணிக்குத்தான்  வாக்குகளைப்  போடுகிறார்கள்”,  என்றவர்  கூறினார். .

நேர்காணல்  ஒன்றில்  நூர்  ஜஸ்லான்  இவ்வாறு  கருத்துரைத்தார்.