இன்று நான்கு-பெட்டிகள் கொண்ட 12 புதிய ரயில்வண்டிகள் வந்துசேர்வதைத் தொடர்ந்து கேஎல் மொனோரெயில் சேவை உருமாறப் போகிறது.
புதிய ரயில்வண்டிகளால் மொனோரெயிலின் பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன் 214-லிருந்து 430 ஆக அதிகரிக்கும் என ஷியாரிகாட் பிராசரானா நெகாரா பெர்ஹாட் ஓர் அறிக்கையில் கூறியது.
இதனால் இனி மொனோரெயில்களில் இப்போது நிலவும் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 72,000 பேர் மொனோரெயிலில் பயணம் செய்வதாக அவ்வறிக்கை கூறியது.
புதிய வண்டிகள் நன்கு சோதிக்கப்பட்ட பின்னரே சேவையில் ஈடுபடுத்தப்படும். அனேகமாக இவ்வாண்டில் மூன்றாம் காலாண்டில் அவை ஓடத் தொடங்கலாம்.
என்ன வந்து என்ன செய்வது. நிர்வாகம் சரியில்லை என்றால் ‘கட்டை வண்டி’ கதை தான்! இதைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோமே!