சாபா ஆர்சிஐ அறிக்கை: தாக்கல் செய்வதில் மேலும் தாமதம்

upkoசாபா  கள்ளக்குடியேறிகள்  மீதான  அரச  விசாரணை  ஆணைய  அறிக்கை கடந்த  டிசம்பர்  மாதத்தில்  தாக்கல்  செய்ப்பட்டிருக்க  வேண்டும். அது  முழுமை  பெறவில்லை  என்பதால்  அதை முடித்துக்  கொடுக்க மேலும்  மூன்றுமாதகால  அவகாசம்  வழங்கப்பட்டது. அதன்படி  இவ்வாண்டு  மார்ச்  24-க்குள் ஆணையம்  அறிக்கையைத்  தாக்கல்  செய்ய  வேண்டும்,

ஆணையத்துக்கு  இதுவரை  மூன்று  தடவை  கால நீட்டிப்பு  கொடுக்கப்பட்டுள்ளது. 

கால நீட்டிப்பு  கொடுப்பது  நல்லதுதான்.  அது  செய்வதைச்  “செம்மையாக  செய்து முடிக்க”  உதவும்  என  உப்கோ  தலைவர்  பெர்னார்ட்  டொம்போக்  போர்னியோ  போஸ்டி-இடம்  கூறினார்.

“ஆணையம்  விசாரணை  செய்தவற்றைப்  பகுத்தாய்வு  செய்து  வருகிறது.  அதற்கு  நிறைய  நேரம்  செலவாகிறது.

“இதுவரை  வந்தாயிற்று.  சற்று  பொறுமையாக  இருப்போம். ஆணையம்  அதன்  அறிக்கையை  அமைச்சரவையிடம்  ஒப்படைக்கும்”, என்றாரவர்.

சாபா மக்கள்தொகை வழக்குத்துக்குமாறாக  பல்கிப் பெருகியது ஏன்  என்பதைக்  கண்டறிவதற்காக  2012  செப்டம்பர்  21-இல்  அந்த  ஆணையம்  அமைக்கப்பட்டு  ஆறு மாதங்களில்  அது  அப்பணியைச்  செய்து  முடிக்க  வேண்டும்  என்றும்  பணிக்கப்பட்டது.