“சுகாதாரமற்ற” சூழ்நிலையால் உதயகுமார் பாதிக்கப்பட்டுள்ளார்

 

Uthaya - infectedகாஜாங் சிறைச்சாலையில் நிலவும் சுகாதாரமற்ற சூழ்நிலையால் தாம் சொறி சிரங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் பிரதமர் நஜிப்பும் உள்துறை அமைச்சர் ஸாகிட் ஹமிடியும் தலையிட வேண்டும் என்றும் ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

மரண தண்டணை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதில் ஜனவரி 15 ஆம் தேதியிலிருந்து 8 நாள்களுக்கு வைக்கப்பட்டிருந்த போது தம்மை இந்த நோய் பற்றிக்கொண்டது என்று கூறிய அவர்,  அவரது உடலின் பல பாகங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறினார்.

இதனால் தாம் தூக்கமின்மையால் அவதிப்படுவதாகவும், தோலில் பாதிக்கப்பட்ட இடங்களை1 uthaya சொறிந்ததால் இரத்தம் வடிவதாகவும் உதா தெரிவித்தார்.

“இச்சூழ்நிலையில், காஜாங் சிறைச்சாலைக்கு திடீர் வருகை மேற்கொள்ளுமாறு நான் இதன் மூலம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்”, என்று அவரது கடிதத்தில் கூறியுள்ளார்.

“நான் அதிகாரப்பூர்வமான வேண்டுகோள்கள் புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள புகார்கள்படி அங்குள்ள அசுத்தமான பகுதிகல், பாதிக்கப்பட்டவர்கள், தவறான நடத்தைகள் மற்றும் குறைபாடுகளை உங்களுக்கு காட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைவேன்”, என்று அவர் அவ்விருவருக்கும் ஜனவரி 25 ஆம் தேதியிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.