தேவாலயத்துக்குள் மொலடோப் குண்டுகள் வீசி எறியப்பட்டன

churchஇன்று  அதிகாலை  பினாங்கு  லெபோ  பார்க்குவார்  அஸ்ஸம்ஷன்  தேவாலயத்துக்குள்  பெட்ரோல்  குண்டுகள்  வீசி  எறியப்பட்டன.

அதிகாலை  1.30 மணி அளவில்  மோட்டார்  சைக்கிளில்  வந்த  இருவர் இரண்டு பெட்ரோல்  குண்டுகளை  வீசி  எறிந்ததாக  பினாங்கு  போலீஸ்  தலைவர் அப்துல்  ரஹிம்  ஹனாபியை  மேற்கோள்காட்டி  த  ஸ்டார்  ஆன்லைன்  அறிவித்தது.

அவற்றில்  ஒன்று  மட்டுமே  வெடித்தது  என்றாரவர்.

தேவாலயத்துக்கு  வெளியில், ஞாயிற்றுக்கிழமை  ‘ஏசுதாதர்  அல்லாவின்  மகன்’  என்றெழுதப்பட்ட  பதாதை  ஒன்று    தொங்க  விடப்பட்ட  24 மணி  நேரத்துக்குள்  இத்தாக்குதல்  நிகழ்ந்துள்ளது.

பதாதைக்கும் தனக்கும்  சம்பந்தமில்லை  என  தேவாலயம்  கூறியது.

இதனிடையே,  பினாங்கு  முதல்வர்  லிம்  குவான்  எங்,   மாநிலத்தில்  தேவாலயங்களையும்  பள்ளிவாசல்களையும்  காவல்  காக்க  250  போலீஸ்காரர்கள்  ஈப்போவிலிருந்து  தருவிக்கப்படுவதாக  தெரிவித்துள்ளார்.