மஇகா தலைமை பொருளாளர் ஆர். ரமணன், நான்காண்டுகளுக்குமுன் உளவியல் மருத்துவர் ஒருவரிடமிருந்து ரிம5 மில்லியன் மோசடி செய்து பெற்றதாக அண்மையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து பதவி விலகினார்.
தீர்ப்பை எதிர்த்து ரமணன் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் முடிவு தெரியும்வரை அவர் பதவி விலகி இருப்பதாக உத்துசான் மலேசியாவின் குறுஞ்செய்தி ஒன்று கூறியது.
ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி இப்படிதான் இருக்கனும்.
வாழ்துக்கள் ரமணன்.முன்பு இருந்தவர்கள் எல்லாம் ரோசம் இல்லாமல் பதவியில் இருந்தார்கள்.
ம. இ. கா.வில் நியமன பதவி என்பது நிலையற்றது..! அது கழுதையை போன்றது முன்னுக்கு போனாலும் உதைக்கும் பின்னுக்கு போனாலும் உதைக்கும்..!
தப்பு பன்னிட்டா.. மூடிகிட்டு போயிடனும்.. ரொம்ப பில்ட் அப் காட்டக் கூடாது ரமணா.. நல்ல முடிவு.
யோவ் ஆசாமி, விவரம் தெரியாமல் பேசாதீர். இவன் “பொறுப்புள்ள அரசியல்வாதி” அல்ல, “வேறு வழியில்லாத” அரசியல்வாதி.
சிலரின் அரசியல் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்காக டத்தோ ரமணன் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்.
அழிக்க நினைத்தவன் அழிக்கப்படுவான்…!!!!!!!
அண்ண!!அது வாழ்த்துகள் ஒரு சிலர் ???
போகும் போது சும்மாவா போகிறார். தினக்குரல் பத்திரிக்கையையும் இழுத்து மூடிவிட்டு அல்லவா போகிறார். அனுதாபங்கள்.
அடுத்தவன் பணத்தை ஏப்பம் விட்டவன் எல்லாருக்கும் கடைசியிலே இதான் கதி ,பெரிய தியாகி இவறு கவுருவமா பதவி விலகுரராம் ,இனிமே அசிங்கத்தை மறைக்க முடியாதுன்னு தெரிஞ்சி போச்சி அதான் வேற வலி இல்லாம சீட்ட கிழிகிரதுக்கு முன்னாடி நம்மாளு தானவே ராஜனாமா பன்னிதாரு ! 55 லட்சம் எல்லாம் நம்மாளுக்கு ஜுஜுபீ தூக்கி வீசிருவார்ல .அந்த ஒரு டாக்டர் வயிறு மட்டுமா எரிஞ்சிருக்கும் ,இன்னும் எத்தனை எத்தனை பேரோ ?
சக்ரவர்த்தி , டத்தோ ரமணா தினக்குரல் பத்திரிகையை மட்டும்
இழுத்து மூடவில்லை , கடந்த ஜூன் மாதத்திலிருந்து நிருபர்களுக்கும் , ஊழியர்களுக்கும் இன்று வரை சம்பளைத்தை
போடாமல் அவர்களை கடன்கார்களாகவும் , சம்பளம் இல்லாமல் குடும்பத்தில் கணவன் மனைவிக்கும் சண்டையையும் மூட்டிவிட்டு
பெரிய யோக்கியன் மாதிரி ம .இ.கா பொருளாளர் பதவியில்
விலகிவிட்டால் போதுமா இவனை போன்ற தொழிலாளியின்
வயிற்றில் அடித்த அயோக்கியனை ம இ.கா உறுப்பினர் தகுதியில்
இருந்தே ராஜினாமா செய்ய வேண்டும் , பாவம் தினக்குரல் பத்திரிக்கையின் ஊழியர்கள் ,கடந்த கடந்த நான்கு மாதமாக
தினகுரலின் தினக்குரலின் ஊழியர்கள் சம்பளத்தை ஏப்பம் இட்டவனை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் , இதை செய்வாரா டத்தோ பழனி நைனா .