பிரதமர்துறையில் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர் ஜோசப் குருப், அமைச்சரவையின் 10-அம்சத் தீர்வுக்கு ஏற்ப மாநிலச் சட்டங்களில் திருத்தம் செய்வது பற்றி கூட்டரசு, மாநில அரசுகள் பேச்சு நடத்தலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.
“இரண்டையும் (10-அம்சத் தீர்வையும் மாநிலச் சட்டங்களையும்) இணப்பதற்கு ஒரு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கலாம்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது தம் தனிப்பட்ட கருத்து என்றும் அமைச்சரவையின் கருத்தோ அரசாங்கத்தின் கருத்தோ அல்ல என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
உங்கள் நல்ல கருத்தை சிறிதும் பயமின்றி அழுத்தமாக அடுத்த் மந்தி(ரி)சபை கூட்டத்தில் கூறுங்கள். அப்போது சரளம்மாக பேச நாக்கு மறுத்தால், சற்று தள்ளி அமரும் சக அமைச்சர் YB பழனிவேலுவை உதவிக்குக் கூப்பிடுங்கள். கருத்தை மிகத் தெளிவாக, தடுமாற்றமின்றி எடுத்து முன்வைப்பார்.
அது நடக்காது என்று தெரிந்தும் இப்படி ஒரு ‘துணிச்சலான’ கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள்! நீங்களே பேச்சு வார்த்தை நடத்தலாம்! வேறு யாரும் தேவை இல்லை!