தம் நிர்வாகத்தைக் குறை சொல்லிக் கொண்டிருந்தால் முந்திய பக்காத்தான் ரக்யாட் ஆட்சியின் “விவகாரமான திட்டங்கள் மீதான கோப்புகள்” அம்பலப்படுத்தப்படும் என்று மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் மிரட்டியிருப்பதை கெடா பாஸ் பொருட்படுத்தவில்லை.
“தயவுசெய்து அதைச் செய்யுங்கள். பிரச்னைகளா, ஊழலா எதையும் மூடிமறைக்க வேண்டாம்”, என மாநில பாஸ் ஆணையர் மாபுஸ் ஒமார் நேற்றிரவு ஒரு ‘செராமாவில்’ கூறினார்.
“எம்பி-இன் போக்கு கெடாவை அழிக்கும். கேள்வி கேட்டால் மிரட்டுகிறார். இது ஆபத்தானது”, என பொகொக் சேனா எம்பியுமான மாபுஸ் குறிப்பிட்டார்.
முக்ரிஸ் அவரை விமர்சிப்பவர்களிடம் நடந்துகொள்ளும் முறை அவரின் தந்தை, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டை நினைவுபடுத்துகிறது என்றாரவர்.
முக்ரிஸ், அவரின் தந்தையைப்போல், ஆட்சிக்குழு உறுப்பினர்களைத் தம் பிடியில் வைத்திருக்க அவர்களின் தவறான நடத்தைகள் மீது இரகசிய கோப்ப்புகளை வைத்துக்கொள்வார் என மாபுஸ் கூறினார்.
“அப்போதுதான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அவர் சொன்னபடி ஆடுவார்கள். எதிர்த்துக் கேள்வி கேட்டால் கோப்புகள் அம்பலப்படுத்தப்படும் என மிரட்டலாம் பாருங்கள்.
“எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருந்தால் அவரின்கீழ் இருப்பவர்கள் தாராளமாக ஊழல் செய்யலாம் என்பதுதான் இதன் அர்த்தமாகும்”.
ஆனால், பக்காத்தான் அணுகுமுறை மாறுபட்டது. முக்ரிஸ் என்னதான் மிரட்டினாலும் பிஎன் ஆட்சியில் ஊழல் நடப்பது தெரிந்தால் அதை நிச்சயம் அம்பலப்படுத்தும் என மாபுஸ் தெரிவித்தார்.
அப்பாவுக்குப் பிறந்த தப்பாத பிள்ளை.
பரிசான் நேசனல், மகா தீரரை அரசியல் ஆலோசகராக ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே தன் மகனுக்கு ஆலோசகராக இருந்து கெடா முதல்வராக்கிவிட்டார். அடுத்த நடவடிக்கை நாட்டிற்கு முதல்வராக்குவது. பெரும்பாலான கடந்த கால அரசியல்வாதிகள் ஓய்வு பெற்ற பிறகு அரசாங்க விவகாரங்களில் மூக்கை நுழைப்பதில்லை. ஆனால் மகா தீரர்………………..????. கையில் கோலுடன் குரங்கை ஆட்டுவிக்கிறார். குரங்கு ஆடுகின்றது.