அன்வார் காஜாங்கில் கூட்டம் நடத்துவதை நிறுத்தப்போவதில்லை

anwarகாஜாங்  இடைத் தேர்தல்  வேட்பாளரான  அன்வார்  இப்ராகிம்,  தாம்  தேர்தல்  சட்டவிதிகளை  மீறவில்லை  என்பதால்  காஜாங்கில்  தம்  செராமாக்களை நிறுத்த  வேண்டிய  அவசியமில்லை  என்கிறார். 

செராமாக்களில்  நடப்பு  விவகாரங்கள்  பற்றித்தான்  பேசுவதாகவும்  அவை  ‘தேர்தல்  பரப்புரைகள்’  அல்ல  என்றும்  அவர்  கூறியதாக  சினார்  ஹரியான்  அறிவித்துள்ளது.

“போலீஸ்  விசாரணை  செய்ய  விரும்பினால்  செய்யட்டும்.  தேர்தல்  ஆணைய (இசி)த்  தலைவர்  அப்துல்  அசீஸ்   யுசூப்கூட  தேர்தல்  சட்டவிதிகள்  மீறப்படவில்லை  என்றுதான்  கூறியுள்ளார்…….

“செராமாக்களில்  போலீசார்  குறுக்கிடுவதில்லை.  அதற்காக  அவர்களுக்கு  நன்றி”,  என  அன்வார்  நேற்றிரவு  காஜாங்கில்  கூறினார்.

பேரணி  நடத்துவதாக  இருந்தால்  அமைதிப்  பேரணிச்  சட்டத்தின்படி  10  நாள்களுக்கு  முன்னதாக  போலீசிடம்  தெரியப்படுத்த  வேண்டும்  என்றும்  ஆனால்,  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்   அவ்வாறு  செய்யவில்லை  என்பதால்  அவர்மீது  விசாரணை  மேற்கொள்ளப்பட்டு  வருவதாக  சிலாங்கூர்  போலீஸ்  கடந்த  வாரம்  கூறி  இருந்தது.