நேற்று, சட்ட விரிவுரையாளர் அப்துல் அஜிஸ் பேரி-க்குக் காரணம் கோரி கடிதம் அனுப்பிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம்(ஐஐயு இன்று அவரை இடைநீக்கம் செய்தது.
பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை வழங்கிய அறிவிப்பில் இந்த இடைநீக்க உத்தரவு அடங்கியிருப்பதாக மலேசியாகினி அறிய வருகிறது.
முழுச் சம்பளத்துடன் அவர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடைநீக்கம் எவ்வளவு காலத்துக்கு என்பது அதில் குறிப்பிடப்படவில்லை.