30 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது கிரீஸ்

கிரீஸ் நாடாளுமன்றத்தில் சிக்கன நடவடிக்கைகளுக்கான இரு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதுமான 48 மணி நேர வேலை நிறுத்தம் நேற்று துவங்கியது.

விமானம் முதல் சாதாரண வாகனங்கள் வரையிலான அனைத்துப் போக்குவரத்துகளும் அரசு அலுவலகம் முதல் கடைத் தெரு வரையிலான அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. முக்கிய நகரங்களில் இலட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று அமைப்புகளின் நிபந்தனைகளை முழுமையாக அமலாக்கும் விதத்தில் இரு மசோதாக்கள் கிரீஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளன.

ஒரு மசோதாவில், வரி உயர்வு, ஓய்வூதியம், சம்பளம் குறைப்பு, ஒப்பந்தத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புதல் உள்ளிட்டவையும் மற்றொரு மசோதாவில், நாட்டின் மொத்தம் 7 இலட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்களில் 30 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்புவது குறைந்த சம்பளத்திலான பணிகள் உள்ளிட்டவையும் அடங்கியுள்ளன.